தமிழகத்தில் தினந்தோறும் காணாமல் போகும் இளம் பெண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!


தமிழகத்தில் நாள்தோறும் 10 முதல் 20 வயதுவரையுள்ள பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் காணமால் போயுள்ளனர். இத்தகவல் மாநில குற்றப்புலனாய்வுப் புள்ளி விவரம் சென்ற ஆண்டு சேகரித்தது.

2010 ஆம் ஆண்டை விட 2011 ஆம் ஆண்டில் இப்படி காணாமல் போனவர்கள் எண்ணிக்கை கூடுதல் தான்.

சொத்துக்காக, பாலியல் வக்ரங்களுக்காக, விபச்சாரக்  கும்பலிடம் விற்க, கட்டாயத் தாலிகட்ட, குடும்பச் சூழலில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடுவது, ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஓடுவது, காதல் விவகாரம். போன்ற காரணங்களுக்கு காணாமல் போகின்றனர். குறிப்பாக விபச்சாரத்தை தொழிலாக நடத்தும் கும்பல்கள் வாலிபர்கள் சிலரை வேலைக்கு அமர்த்தியுள்ளது போல் தோன்றுகிறது?! இவர்கள் பலகீனமான சிறுமிகளுக்கு காதல்வலைவீசி அவர்களைக் கடத்தி இந்த கும்பலுக்கு விற்றுவிடுவதும் சில இடங்களில் நடப்பதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

பெண் குழந்தைகள் பருவப் பெண்கள் மட்டுமல்லாமல் பையன்களும் பெருமளவு காணமால் போவதும் நடக்கிறது. இவர்கள் தொழிலகங்களில் வேலை செய்யவும், எடுபிடி வேலை பார்க்கவும் அமர்த்தப்படுகின்றனர்.

ஓர் இடத்திலிருந்து இதுபோன்ற வயதுள்ளவர்கள் ஆண்டுதோறும் காணாமல் போவது சமூகப் பிரச்சனையாகும். காவல்துறை, தொண்டு நிறுவனங்கள், இதர சமூக நல அமைப்புகள் விழிப்போடு கண்காணிப்பை அதிகப்படுத்தினால் தவிர இது போன்றவை கூடுதலாக நிகழ்வதை தடுக்க இயலாது. “தனக்கு உடன்பாடான ஒன்று இல்லாத நிலையில்தான் இதுபோன்ற காணாமல் போகும் மனநிலை உருவாகிறது. சிலர் தாமாகவே திரும்புவதும் உண்டு சிலர் திரும்பச் சென்றால் எண்ணாகுமோ என்ற அச்சத்தில் வேறு நிலைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கின்றனர். இதில் பெரும்பாலும் உரிய விழிப்புணர்வு இல்லாமல் அப்பாவிகளாக இருப்போர், உரிய குடும்பப் பராமரிப்பு குறைவானவர்கள், உறவுகளின் உதாசீனம், புறக்கணிப்பு, அவமரியாதை, அடி – உதைகள் போன்றவைகளால்  ஓடிப் போகும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

பல சமயங்களில் மக்கள் அதிகம் கூடும் இடமான ரயில்நிலையம், பேருந்து நிலையங்களில் காவல் துறையினர் சந்தேகம் வரும் இந்த வயதுள்ளவர்களைக் கண்டறிந்து ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது எதனால் நிகழ்கிறது ஏன் நடக்கிறது. இடம் விட்டு இடம் பெயரும் இந்த சம்பவங்கள் எதற்காக தொடர்ந்து அதிகரிக்கிறது என்பதெல்லாம். தீவிரமாக ஆராய வேண்டிய சமூகப் பிரச்சணையாகும்.

முன்பெல்லாம் பெரியவர்கள் புதிதாக தங்கள் பகுதியில் புதிய நபர்கள் தென்பட்டால் யார் இவர் என விசாரிப்பார்கள். இன்று சென்னை போன்ற பெருநகருக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால். விசாரிப்பு குறைந்து விட்டது. அத்துடன் நமக்கேன் வம்பு, தலைக்கு மேல் வேலை உள்ளது என்ற அவசர கதியில் நகரமும் நகரத்தின் மக்கள் போக்கும் மாறிவிட்டதால் அண்டை  அயலில் கூட நட்பு கொள்வது குறைந்து விட்டது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் கூட தெரிவதில்லை. இன்னும்  இது போன்ற சமூக காரணிகள் காணாமல் போகிற சம்பவங்களுக்குக் காரணமாகிறது.
hotlinksin

0 Responses to “தமிழகத்தில் தினந்தோறும் காணாமல் போகும் இளம் பெண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!”

Post a Comment