த்ரிஷா, இலியானா வேண்டாம்... - கடுப்பான இளம் இயக்குநர்




த்ரிஷா, இலியானா போன்ற நடிகைகளை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜோதிகிருஷ்ணா. பிரமாண்ட செலவில் உருவான உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இப்போது ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ஊலலலா. இந்தப் படத்தில் ஹீரோவும் அவரே. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தைப் பற்றி பேசிய அத்தனை பேருமே படத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்கள். ‘படம் முழுக்க முழுக்க காமடியாக இருக்கும் என்றும் பேருக்கு சும்மா கொஞ்சமா சென்டிமென்டையும் வெச்சிருக்கோம்... இந்த படம் நிச்சயம் நூறு நாட்களை கடந்து ஓடும்’ என்று பேசினார்கள். இதைத் தொடர்ந்து பேச வந்த ஜோதி கிருஷ்ணா, ‘இன்றைய சூழ்நிலையில் ஒரு படம் 100 நாட்கள் ஓடுவது எல்லாம் சாத்தியமே இல்லை... ரெண்டு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாக இருக்கிறது. என்னுடைய முதல் படத்தில் கத்துக்கிட்ட நிறைய விஷயங்களை எடுத்துத் தள்ளியிருந்தேன். இதனாலேயே படம் முழுக்க பேன்டஸியாக இருந்தது. ஆனால் இந்த ஊலலலா படத்தைப் பொறுத்தவரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் வெச்சிருக்கோம். பார்க்கிற ஒவ்வொரு ரசிகனுக்கும் இந்த படம் பிடிக்கும். அந்த அளவுக்கு படத்தில காமெடி இருக்கிறது...’ என்று மிகவும் எதார்த்தமாக பேசினார் ஜோதி கிருஷ்ணா. அவரது அமைதியான பேச்சே அவரது படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

நீங்கள் அறிமுகப்படுத்திய த்ரிஷா, இலியானா போன்றவர்களிடம் கால்ஷீட் கேட்டீர்களா...? என்று கேட்டதற்கு அவர்கள் பிஸியான நடிகைகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டால் ஆளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கால்ஷீட் கொடுப்பார்கள். படம் முடிய இன்னும் காலதாமதம் ஆகும் என்பதால்தான் அவர்களிடம் கேட்கவில்லை... இந்த படத்தில் ப்ரீத்தி பாண்டாரியை அறிமுகப்படுத்துகிறேன். அவரும் மிகப்பெரிய அளவுக்கு முன்னணி நடிகைகள் இடத்தைப் பிடிப்பார்...’ என்கிறார் ஜோதிகிருஷ்ணா.
hotlinksin

0 Responses to “த்ரிஷா, இலியானா வேண்டாம்... - கடுப்பான இளம் இயக்குநர்”

Post a Comment