வெங்காயம் தந்த மவுசு... - சந்தோஷத்தில் நடிகை



வெங்காயம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பவினா. முதல் தடவை வெங்காயம் ரீலீஸ் ஆன போது வந்த வேகத்திலேயே படம் ரிட்டன் ஆனால் தவித்துப் போய்விட்டார் பவினா. இத்தனைக்கும் நடிப்பில் தூள் கிளப்பியிருந்தார் பவினா.  படம் ஓடாவிட்டால் சாதாரண ரசிகனே திரும்பிப் பார்க்க மாட்டான். அப்படி இருக்கும்போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மட்டும் திரும்பிப் பார்த்துவிடுவார்களா என்ன? ஆனாலும் இவருக்கு சிறிய படங்கள் சில கமிட் ஆகின. அத்தனையும் கிளாமரான வேடங்கள். வந்தவரைக்கும் என்று அதிலும் நடித்துத் தொலைத்தார் பவினா. அதுவும் ‘ஒரு சந்திப்பில்’ படத்தில் இவரை அப்படியே வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் காட்டிவிட்டார்களாம். ஏறக்குறைய சூழ்நிலை படத்திலும் இப்படிப் பட்ட கேரக்டர்தானாம். ஆனால் சமீபத்தில் சேரன் வெங்காயம் படத்தை ரிலீஸ் செய்ய படத்திற்கு ஏகப்பட்ட மவுசு கூடியிருக்கிறது. படத்திற்கு மட்டுமல்ல படத்தில் நடித்த நடிகை பவினாவுக்கும்தான். பொண்ணு நல்லா நடிக்குதேப்பா என்று கோடம்பாக்க இயக்குநர்களே வாய்விட்டு சொல்லியிருக்கிறார்களாம். இதைக் கேட்ட சந்தோஷத்தில் பவினாவுக்கு கண்ணீரே வந்துவிட்டதாம். இதைத் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இப்போதைக்கு பவினாவின் வீட்டுக் கதவைத் தட்ட ஆரம்பித்திருக்கிறது.
hotlinksin

0 Responses to “வெங்காயம் தந்த மவுசு... - சந்தோஷத்தில் நடிகை”

Post a Comment