கேபிள்சங்கர் பற்றி ‘கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்’ என்னும் தலைப்பில் சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த செய்திக்குப் பிறகு சுந்தர் சி படத்திற்கு வசனம் எழுதி முடித்த கையோடு மேலும் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார் கேபிள்சங்கர். திரைக்கதை, வசனம் எழுதும் போது, கைவசம் இருக்கும் எக்கச்சக்க ஐடியாக்களை எடுத்துக் கொடுக்கும் திறமை கேபிள் சங்கரின் ஸ்பெஷல். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும் அவற்றை மென்மையாக மறுத்தே வருகிறார் இவர். இதற்கு காரணம் அடுத்து இவர் படம் இயக்கப் போவதால்தான். கனா காணும் காலங்கள் தொடரில் இயக்குநர் அதில் நடிக்கும் நடிகர்களின் வற்புறுத்தலின் பேரில் நடித்து வருகிறார். இதெல்லாம் சராசரி செய்தி என்றாலும் இனி சொல்லப் போவதுதான் முக்கிய செய்தி. முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஒருவரை சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்திருக்கிறார் கேபிள். தன் பட இயக்கம் பற்றி அவரிடம் பேச உங்கள் கதையின் ஒன்லைன் சொல்ல முடியுமா என்று தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். ஒருவரியில் கேபிள் கதையைச் சொல்லி முடிக்க, முழுக்கதையை கேட்காவிட்டால் தலையே வெடித்துவிடும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர். ‘நெக்ஸ்ட் வீக்ல டைம் ஃப்ரீ பண்ணிட்டு சொல்றேன்... அப்போ வந்து முழுக் கதையையும் சொல்லுங்க... ஓ.கே.னா உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்...’ என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். அந்த கதை படமாக உருவாகும் பட்சத்தில் என்ன தலைப்பு வைத்தால் கமர்ஷியலாக செட் ஆகும் என்று கேபிள்சங்கர் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.
0 Responses to “கேபிள்சங்கர் சொன்ன கதை... ஆடிப்போன தயாரிப்பாளர்...”
Post a Comment