ஓகேஓகே படத்துக்கு தகுதி இல்லையா? - உதயநிதி குமுறல்
தமிழக அரசு தங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளிக்காமல் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறது என்று வேதனையில் குமுறுகிறார் உதயநிதி. ஏழாம் அறிவு படத்தை உதயநிதி தயாரித்து வெளியிட்ட போது தமிழக அரசின் வரி விலக்குக்கு விண்ணப்பித்திருந்திருக்கிறார்கள். ஆனால் வரி விலக்கு அளிக்காமல் நாட்களை நகர்த்திய தமிழக அரசு, படம் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள். அதே நிலையில்தான் இப்போது இருக்கிறது ஓகேஓகே படமும். இந்தப் படத்தை வரி விலக்குக்கு விண்ணப்பித்து நாட்கள் பல ஆன பிறகும் வரிவிலக்குக்கு ஓ.கே. சொல்லும் நிர்வாகத்தினர் படம் பார்ப்பதை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். கடைசியில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி படம் பார்க்க நாள் குறிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த 7 பேர் கொண்ட குழு படம் வரி விலக்குக்கு தகுதியானதல்ல என்று முடிவு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளார்கள்.
சமீபத்தில் வெளியான 3 படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரும் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி பாரில் வைத்து திருமணம் முடிவது போன்றும் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வரி விலக்கு கொடுத்துள்ள அரசு மக்கள் கொண்டாடும் ஓகேஓகே படத்திற்கு வரி விலக்கு கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. ‘என் தந்ததை அரசியலில் இருக்கும் காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலேதான் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வரி விலக்கு அளிக்காமல் தமிழக அரசு இருந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளராககிய எனக்கு மட்டுமின்றி... விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது...’ என்று குமுறியிருக்கிறார் உதயநிதி.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ஓகேஓகே படத்துக்கு தகுதி இல்லையா? - உதயநிதி குமுறல்”
Post a Comment