ரோகிணி கேட்ட கேள்வி - ஆடிப்போன இசையமைப்பாளர்



டிவி சேனல் ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் நடிகை ரோகிணி. ஏற்கனவே நடிகை சுகாசினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல் படத்தின் இயக்குநர் நடிகர் போன்றோரையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பேட்டி காண்பதுடன் படத்தையும் விமர்சனம் செய்கிறார் ரோகிணி.



ஒத்தவீடு படத்திற்கான விமர்சன நிகழ்ச்சியின் போது படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். படத்தின் இயக்குநர், நடிகர் போன்றோரிடம் வளைத்து வளைத்து கேள்விகள் கேட்டார் ரோகிணி. படத்தின் சில விஷயங்களை குறைகூறுகிறேன் என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். இயக்குநரிடம் இந்த காட்சி ஏன் இப்படி, அந்த காட்சி ஏன் அப்படி...? என குறுக்கு விசாரணை நடத்துவது போன்று  கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியாக இசையமைப்பாளர் தஷியிடம் கேள்வி கேட்க ஆயத்தமானார் ரோகிணி. அவர் இசையமைப்பாளர் தஷியைப் பார்த்து கேட்ட முதல் கேள்வியே அவரை ஆடிப் போக வைத்துவிட்டது. காரணம், ‘இதுதான் உங்கள் முதல் படமா?’ என்ற கேள்வியை தஷியைப் பார்த்து கேட்டார் ரோகிணி. ஏராளமான படங்களுக்கு இசையமைத்துவிட்ட இசையமப்பாளர் தஷி, கேரள அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலேயே எடுத்த எடுப்பிலேயே தஷியிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதை தஷியின் முகபாவனைகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.

சன் டிவியில் வீரபாண்டியன் அரசியல் பிரமுகர்களை பேட்டி எடுப்பார். அரசியல் பிரமுகர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விஷயங்களை தேடிப் பிடித்து அறிந்து கொள்வார் அதன் பின்னர்தான் அவரை பேட்டி காண்பார். பெரிய அளவுக்கு பிரபலமாகாதவர்கள் எனில் அவர்கள் வாயாலேயே அவர்கள் செய்த சாதனைகளையெல்லாம் சொல்ல வைத்துவிட்டு அல்லது அவரை பற்றி  வீரபாண்டியனே ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு அதன் பிறகே பேட்டியாளரிடம் கேள்விகளைக் கேட்பார். இதுதான் பேட்டி எடுப்பதன் அடிப்படை முறை. ஆனால் இது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ளாமலே எடுத்த எடுப்பிலேயே  ரோகிணி இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பேட்டி கொடுக்க வந்தவர்களை ஆடிப்போக வைப்பது சரியா..?

உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com திரட்டியில் இணைத்துவிட்டீர்களா...?
hotlinksin

0 Responses to “ரோகிணி கேட்ட கேள்வி - ஆடிப்போன இசையமைப்பாளர்”

Post a Comment