விகடன் - அதிர்ச்சி தந்த விளம்பரமும் கட்டுரையும்...



சென்ற மாதத்தின் பசுமை விகடன் பத்திரிகையை நேற்று மின்சாரம் இல்லாத பகல் நேரத்தில்தான் புரட்ட முடிந்தது. ஐந்தாறு பக்கம் புரட்டியதுமே இரண்டு பக்கத்திற்கு பிரமாண்டமாக ஒரு விளம்பரம் அதாவது ஈமு கோழி வளர்த்து லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என்று வெளியாகியிருந்தது.

என்னடா இது... ஊரு முழுக்க ஈமு கோழி வளர்த்து சின்னா பின்னமாகிட்டோம்னு ஒவ்வொருத்தரும் சொல்லிட்டிருக்காங்க. இது என்ன அதிசயமா இப்படி ஒரு விளம்பரத்தை பசுமை விகடன்ல போட்டிருக்காங்க... என்று நினைத்துக் கொண்டே அடுத்த பக்கத்தைப் புரட்டினால், அங்கு ஒரு கட்டுரை. ஈமு கோழி வளர்ப்பது சுத்த வேஸ்ட் என்றும் அதனால் பணம் கொஞ்சம் கூட சம்பாதிக்க முடியாது என்று 2 பக்கத்திற்கு மேல் சொல்லிக் கொண்டு போனது அந்த கட்டுரை.

பசுமை விகடன் என்று இல்லை... பெரும்பாலான பத்திரிகைகள் இதே தவறைத்தான் செய்கின்றன. ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான விஷயங்களைப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. புகையிலை பிடிப்பது தவறு என்று சொல்லிக் கொள்ளும் அரசாங்கமே அதை விற்பதற்கு அனுமதியும் கொடுத்திருப்பது போன்றுதான் இருக்கிறது இந்த விளம்பர கம் ஆர்ட்டிகிள் மேட்டர்.

நாங்கள் வெளியிடும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்று சொல்லிக் கொண்டுதான் இப்போது எல்லா பத்திரிகைகளும் விளம்பரத்தை வெளியிடுகின்றன. அதாவது எந்த விளம்பரங்களையும் நாங்கள் பணம் கொடுத்தால் வெளியிட்டு விடுவோம். மற்றபடி அதை தொடர்பு கொள்பவர்கள் ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல... என்பதுதான் இதன் சாராம்சம்.

இந்த நிலை மாறி உண்மைத் தன்மை உள்ள விளம்பரங்களை வெளியிட்டால் படிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். வாசகர்களும் ஏமாற்றப்படாமல் இருப்பார்கள். அதைவிட்டுவிட்டு பணம் வருகிறது என்பதற்காக கண்ட விளம்பரங்களைப் போட்டுவிட்டால் பாதிக்கப்படுவது வாசகர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட பத்திரிகையின் சர்க்குலேஷனும்தான்.

நண்பர்களே... பதிவர்களே... www.hotlinksin.com திரட்டியில் இணைந்து விட்டீர்களா...? இல்லையென்றால் உடனே இணைந்திடுங்கள்...
hotlinksin

0 Responses to “விகடன் - அதிர்ச்சி தந்த விளம்பரமும் கட்டுரையும்...”

Post a Comment