பதிவர்கள் செய்யும் தவறுகள்


தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி எனும் மூன்று திரட்டிகளும் எப்போதும் என் பயர்பாக்ஸில் திறந்தே இருக்கும். அவ்வப்போது இந்த திரட்டிகளுக்கு சென்று உலவி பிளாக்குகளில் மேய்வது வழக்கம். தினமும் இப்படி குறைந்தது 20லிருந்து 50க்கு மேலான பிளாக்குகளை படித்துவிடுவேன். இதனாலேயே ஒருவரது பிளாக்குக்கு தொடர்ந்து  போய் படிக்கும் பழக்கம் இல்லாமல் போயிற்று. 

இப்படி ஒருநாள் தேடி தேடி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிளாக்குக்குப் போனேன் போன அடுத்த வினாடியே ஏண்டா  இந்த பிளாக்குக்கு வந்தோம் என வெறுத்தேப் போய்விட்டது... என்னைப் போல் அந்த பிளாக்குக்குப் போன பலரும் இப்படி நொந்து போயிருப்பார்கள். அப்படி அந்த பிளாக்கில் நான் பட்ட அவஸ்தைதான் பிளாக்கில் எனக்கிருக்கும் சில யோசனைகளையும் சேர்த்து இந்த தலைப்பில் எழுத வைத்தது.

இதை முதலில் ஒரு கட்டுரையாகத்தான் எழுத யோசித்தேன். ஆனால் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் சேர்ந்து கொண்டே போனதால் இதை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த தொடர்.

எப்படியோ தேடிப் பிடித்து பிளாக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்து விடுகிறோம். அதன் பிறகு என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம்... என்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்து போய்விடுகிறது. சரி... அதையும் மீறி நல்ல விஷயம் ஒன்றை எழுதிவிட்டால் அதைத் தொடர்ந்து வாசகர்கள் வர வேண்டுமே... அதுவும் பிரபல பதிவராக வேண்டும் என்னும் ஆசை மனதில் வந்துவிடுகிறது. பிளாக்கர்கள் என்ன எல்லாம் செய்தால் பிரபலமாவர்கள்... என்பதை மட்டுமல்ல... என்னவெல்லாம் செய்யாமல் இருந்தாலே பிரபலமாவார்கள் என்பதையும் சொல்லப் போகிறேன்...

அடடே ஒரு இன்ட்ரடக்க்ஷன் கொடுக்கிற ஆர்வத்தில என்ன அந்த பிளாக் ஏன் டென்ஷனாக்கியது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டேனா... கொஞ்சம் பொறுங்கள்... அதுவும் ஒரு நீண்ட பதிவுதான்... அதனால் நாளை சொல்லிவிடுகிறேன்.

-------------------------
தெரியுமா சேதி...

இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி வரிசையில் புதிதாக ஒரு திரட்டி ஒன்று இணைந்திருக்கிறது. ஹாட்லிங்க்ஸ்இன் என்பதுதான் அந்த திரட்டியின் பெயர். நண்பர்கள் ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து உங்கள் பதிவுகளை இணைக்கலாமே. ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைப்பதன் மூலம் உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வருவார்கள் என்பது மட்டுமில்லை... உங்கள் இணையதளத்தின் அலெக்ஸா ரேங்கிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
hotlinksin

0 Responses to “பதிவர்கள் செய்யும் தவறுகள்”

Post a Comment