பில்லா 2 - ஆண்டியாகப் போவது யார்?




பரபரப்புடன் தயாராகிவரும் பில்லா 2 படத்தின் விற்பனை இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தின் தமிழக திரையரங்குகளின் உரிமை மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. படத்தின் தமிழக விநியோக உரிமையை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். ரவிச்சந்திரன் பில்லா 2வை மற்ற விநியோகஸ்தர்களிடம் விற்றுவிடுவார் என்றே தெரிகிறது. நிச்சயம் சொந்தமாக ரிலீஸ் செய்ய மாட்டார். 5 வருடங்களுக்கு முன்பு பில்லா 1 படம் ரிலீஸ் ஆன போது இருந்த டிரென்ட் வேறு இப்போது இருக்கும் ட்ரென்ட் வேறு. அஜித்தின் மாஸ்க்காகவே அவரது படங்கள் முதலில் சில நாட்கள் ஓடிய காலம் அது. ஆனால், இன்றோ எந்த ஒரு பெரிய நடிகரின் படத்திற்கும் இருக்கும் ஓப்பனிங் படம் நல்லா இல்லாவிட்டால் அடுத்த ஓரிரு நாட்களிலேயே படம் ஊத்தி விடுகிறது. இந்நிலையில் பில்லா 2 படத்தைப் பொறுத்தவரை ரவிச்சந்திரனை விட இந்த படத்தை ஒவ்வொரு ஏரியாவுக்கும் வாங்குகிற விநியோகஸ்தர்களே அதிகம் ரிஸ்க் எடுக்கிறார்கள். படம் ஹிட்டானால் இந்த விநியோகஸ்தர்கள் எக்கச்சக்கமாக சம்பாதிப்பார்கள். ஆனால், படம் ப்ளாப்பானால் நிச்சயம் மிகப்பெரும் ஆண்டியாகிறவர்களும் இந்த விநியோகஸ்தர்களாகத்தான் இருப்பார்கள்.
hotlinksin

0 Responses to “பில்லா 2 - ஆண்டியாகப் போவது யார்?”

Post a Comment