கோபிநாத்... நாங்க... நீயா நானா பார்க்கணுமா? வேண்டாமா?
கடந்த ஞாயிற்றுக்கிழமை நீயா நானா பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்து பார்த்தால் பேரதிர்ச்சி காத்திருந்தது. டிவியில் கொஞ்சம் விரும்பிப் பார்க்கிற நிகழ்ச்சியே இது ஒன்றுதான். அதையும் இனிமேல் நீ பார்ப்பியா...? என்பது போல் அன்றைய நிகழ்ச்சி அமைந்திருந்தது. முதலில் டாப்பிக்கின் டைட்டிலை கேளுங்க... அப்புறம் உங்களுக்கே கோபம் வரும்... அதிகமாக சீன் போடுவது யார்...? ஆண்களா? பெண்களா? என்பதுதான் டைட்டில். நாலு பேரு நாலு விஷயங்களைப் பத்திப் பேசுவாங்க... கொஞ்சம் ஆவர்மாக பார்க்கலாம் என்று பார்த்தால்... கொஞ்சம் ஆண்கள் இந்த பக்கமும் கொஞ்சம் பெண்கள் அந்த பக்கமும் உட்கார்ந்து கொண்டு நீயா நானாவில் சீன் போடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதுவும் கோபிநாத் அவர்களிடம் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறார். நீங்க எப்படி சீன் போடுவீங்க என்று... ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றியதை சொல்லி ஒப்பேத்துகிறார்கள். ஐந்து நிமிடம் பார்ப்பதற்குள் கடுப்பாகிவிட்டது.
வாரத்தில் ஒரு நாள் வருகிற நிகழ்ச்சி இந்த நீயா நானா. அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே டான் என நீயா நானா துவங்கும் நேரத்திற்கு ஆஜராகவிடுவார்கள். இது போன்ற டைட்டில்களை வைத்துக் கொண்டு விவாதிப்பது அவர்கள் அத்தனை பேருக்கும் ஏமாற்றத்தை அளிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களது நேரங்களையும் திருடுவதற்கு சமமாகும்.
விவாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற மொக்கையான விஷயங்களை ஏன் நீயா நானா டீம் எடுத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஐடியா இல்லை என்றால் ஒரு சிறிய விளம்பரம் ஒன்றை நிகழ்ச்சின் இடைவெளியில் கொடுங்கள். வந்து குவியும் ஆயிரம் டைட்டில்கள். அதைவிட்டுவிட்டு இது போன்று சப்பை கட்டு கட்டும் விவாதங்களை கண்டிப்பாக தவிருங்கள். இவை நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பதற்கு பதிலாக... நிரந்தரமாக பார்க்க விடாமல் செய்துவிடும்...
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கோபிநாத்... நாங்க... நீயா நானா பார்க்கணுமா? வேண்டாமா?”
Post a Comment