பாலியல் தொழிலாளியாக நடிக்க ஆசை - நடிகை அதிரடி




நடிகரோ நடிகையோ தன் வாழ்நாளில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என்னும் லட்சியத்தை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய ட்ரீம் ரோல். நடிகை ஆன்ட்ரியாவுக்கும் இப்படி ஒரு ட்ரீம் ரோல் இருக்கிறது. அது என்ன தெரியுமா? பாலியல் தொழிலாளியாக நடிப்பது. ‘பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிப்பது தனது கனவு ரோல் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க யோசிக்கமாட்டேன்... உடனே ஒத்துக் கொள்வேன்...’ என்கிறார் ஆன்ட்ரியா. இது போன்ற கேரக்டரில் நடித்தால் உங்கள் இமேஜ் பாதிக்காதா என்று கேட்டால் ‘கரீனா கபூர், தபு போன்றோரல்லாம் அது போன்ற கேரக்டரில் நடித்தார்கள். அதனால் அவர்களது இமேஜ்க்கு பாதிப்பு வந்துவிட்டதா என்ன?’ என தனக்கு முன்னாலேயே பாலியல் தொழிலாளியாக படங்களில் நடித்த நடிகைகளைச் சுட்டிக்காட்டி பேசுகிறார் ஆன்ட்ரியா. 

01:30 by iamvenkatesh · 0

hotlinksin

நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்



அறிமுகமாகி பல வருடங்கள் ஆன போதிலும் இதுவரை வெகு சில படங்களிலேயே நடித்திருக்கிறார் நிகிதா. சமீபத்தில் வெளியான முரண் படத்திலும் சேரனின் அடங்காத மனைவியாக வந்து ஆட்டம் போட்டவர் இந்த நிகிதா. கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்றாவது நாயகியாக இப்போது இணைந்திருக்கிறார் நிகிதா. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சுராஜ். ஏற்கனவே அலெக்ஸ் பாண்டியனின்ல அனுஷ்கா, சனுஷா ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் சுராஜ் நிகிதாவுக்கு இந்த வாய்ப்பை கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். கார்த்தியுடன் நடிப்பது பற்றி கேட்டால், ‘கார்த்தி எனக்கு மிகவும் பிடித்த நடிகர்… கார்த்தியுடன் நடிக்கும் இந்த படம் எனக்கு பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன்…’ என்கிறார் நிகிதா.

14:24 by iamvenkatesh · 0

hotlinksin

பெண்களின் விழிப்புணர்வுக்காக ஒரு நான்வெஜ் படம்



பணத்திற்காகவும், சொகுசாக வாழவேண்டும் என்கிற பேராசையாலும் பெண்கள் எப்படி சீரழிந்து போகிறார்கள் என்பதை மையக்கருவாகக் கொண்டு உருவாகிறது “அசைவம்”

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் தகுதிக்கு மீறிய வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்களது எண்ணம் அறிந்த காமவெறியன் ஒருவன் அவர்களைத் தன் வசப்படுத்துகிறான்.  அவனிடம் சிக்கிய அந்த பெண்களின் கதி என்ன? என்பதை விறுவிறுப்பான பின்னணியில், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணர்வுபூர்வமான படமாக உருவாகியுள்ளது  “ அசைவம் “


அன்னை தெரசா இண்டெர் நேஷனல் சார்பில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து  இயக்கியும் இருக்கிறார் கின்னஸ் கிஷொர்.  நாயகன் சித்தார், நாயகிகள் ஜெனிபர்,ஸ்ரீஜா இவர்களுடன் வாசு விக்ரம், சிட்டி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


15:52 by iamvenkatesh · 0

hotlinksin

ஹன்ஸிகாவா இப்படி செய்கிறார்...?



சினிமா நடிகைகள் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் செய்கிற முதல் வேலை ஆங்காங்கே இடத்தை வாங்கிப் போடுவதுதான். அதன்பிறகு முடிந்தால் கல்யாண மண்டபம் கட்டுவார்கள். பணத்தை நல்ல வகையில் முதலீடு செய்வது எப்படி என்று நிபுணர்களிடம் பாடமும் படிப்பார்கள். ஆனால் ஹன்ஸிகா இதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறார். இவரது நீண்டநாள் கனவு முதியோர் இல்லம் கட்டுவதுதான். இந்த கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஹன்ஸிகா. முதல் வேலையாக இதற்காக நல்ல இடத்தைப் பார்க்கும்படி தனது அம்மாவிடம் சொல்லியிருக்கிறார் ஹன்ஸிகா. முதியோர் இல்லம் கட்டி முதியோர்களைப் பராமரிக்க வேண்டும்... என்ற கொள்கையுடன் இருக்கும் ஹன்ஸிகாவை ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

15:37 by iamvenkatesh · 0

hotlinksin

சிமென்ட் மூட்டை திருடி விற்ற சிவகார்த்திகேயன்




சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் மனம் கொத்திப் பறவை ஷூட்டிங் மற்றும் இன்ன பிற வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் கடலளவு காமெடி கடுகளவு காதல் என்னும் பாலிஸியுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.

‘படத்தின் கதை ரொம்பவே சிம்பிளானதுதான். ஒரு ஆரம்பப் பள்ளியைச் சுற்றிலும் நகர்கிறது கதை. சிவகார்த்திகேயனுடைய அப்பா இளவரசு ஒரு பில்டிங் காண்டிராக்டர். அப்பாவுக்கு தெரியாமலே சிமென்ட் மூட்டைகளைத் திருடி விற்கிற கேரக்டர்தான் சிவகார்த்திகேயனுடையது. பள்ளிக்கூடம் ஒன்றின் கன்ஸ்ட்ரக்ஸன் வேலைக்குப் போவார் சிவகார்த்திகேயன். அங்கு கரஸ்பாண்டன்டாக இருக்கிறார் ஹீரோயின்... அப்புறம் என்ன... காதல் மோதல் காமெடி தான்... படம் பாருங்க சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க...’ என்கிறார் படத்தின் இயக்குநர் எழில்.

00:55 by iamvenkatesh · 0

hotlinksin

சேரனின் மாஸ்டர் பிளான் - கைகொடுக்குமா? காலை வாருமா?



சமீபத்தில் வெளியான படம் வெங்காயம். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் அத்தனை பேருமே படத்தைப் பாராட்டினார்கள். ஆனாலும் படம் சில நாட்கள் கூட ஓடவில்லை. காரணம், படம் வெளியானதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. அந்த அளவுக்கு படத்திற்கு பப்ளிசிட்டி செய்யாமல் விட்டிருந்தார்கள். என்னதான் படத்தை கோடி கோடியாக கொட்டி எடுத்தாலும், படத்திற்கு விளம்பரம் இல்லையென்றால் மக்களை அது போய் ரீச் ஆவதே இல்லை. இதை லேட்டாக உணர்ந்திருக்கிறது வெங்காயம் படக் குழு. அதே நேரத்தில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரனுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. நல்ல கருத்துக்கள் இருக்கும் வெங்காயம் படம் நிச்சயம் ரசிகர்களை நல்ல முறையில் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை ரீரிலீஸ் செய்கிறார் சேரன். இதற்காக பப்ளிசிட்டி டிசைன்ஸ்களில் இருந்து எல்லாமே மாற்றப்பட்டுள்ளன. வெங்காயம் படத்தின் புதுவித விளம்பர டிசைன்கள் ரசிகர்களை ஈர்க்கிற விதத்தில்  உருவாக்கப்பட்டுள்ளன. டைட்டிலிலும் மாற்றம் செய்திருக்கிறார் சேரன். சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பழைய வெங்காயம் இப்போது ப்ரெஷ்ஷாக வலம் வரப்போகிறது.

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

தயாரிப்பாளர் காலை வாரிய நடிகர்




இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சுவையான சம்பவங்களைக் களமாகக் கொண்டு இளசுகள் என்னும் படம் உருவாகி வருகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது போஸ்ட் புரடக்ஸடன வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரையுலகிற்கு புதியவர். இவரது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் படத்தைத் தயாரிக்க வந்துள்ளார். மீடியம் பட்ஜெட்டில் படத்தை முடித்து விட வேண்டும் என்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

புதுமுகமாக அறிமுகமாகும் இப்படத்தின் ஹீரோவின் நட்பு கிடைத்திருக்கிறது. கையில் இருக்கும் தொகை படத்தைத் தயாரித்து முடிக்க போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் அவரிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். ‘அதற்கென்ன... உங்களுக்கு எத்தனை லட்சம் வேணும்னு சொல்லுங்க... நான் அரேஞ்ச் பண்ணிடுறேன்... ஆனா, என்னை ஹீரோவாகப் போட்டுதான் படம் எடுக்கணும்...’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ. ‘பணம் போடுறாரே... அப்புறம் என்ன ஹீரோவாக அவரையே போட்டு படத்தை எடுத்துவிடலாம்...’ என்று முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.

படத்தின் பூஜையும் போட்டு முடித்தாயிற்று. படப்பிடிப்பையும் துவக்கிவிட்டார்கள். தயாரிப்பாளரின் பணம் தண்ணியாய் செலவாக ஆரம்பித்தது. ஹீரோவிடம் போன தயாரிப்பாளர் ‘தம்பி... பணம் ரொம்ப செலவாகிட்டு இருக்குது... நீங்க தரேன்னு சொன்ன பணத்தை எப்போ தருவீங்க...’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஹீரோ... ‘அடுத்த வாரம் ஊருக்கு போறேன்... ஊர்ல இருந்து அரேஞ்ச் பண்ணிட்டு வந்து தந்துடுறேன்...’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒருவாரம் ஊருக்கு போய்விட்டு வந்த ஹீரோவின் முன்னால் போய் நின்றிருக்கிறார் தயாரிப்பாளர். ‘என்ன தம்பி... பணம் ரெடியா...?’ என கேட்டிருக்கிறார்.

‘அப்பாகிட்ட ரெடி பண்ண சொல்லியிருக்கேன்... ஒரு வாரத்தில பேங்க்ல போட்டிருவாங்க... டோன்ட் ஒரி...’ என்று நம்பிக்கையுடனே சொல்லியிருக்கிறார் ஹீரோ. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டே இருந்திருக்கிறது. பாதி படம் முடிந்த பிறகும் ஹீரோ பணத்தை இறக்காததால் சற்றே டென்ஷனான தயாரிப்பாளர், ‘என்ன தம்பி... என்ன ஆச்சு... பணத்தை தருவீங்களா... இல்லையா...?’ என்று கேட்டிருக்கிறார்.

பாதி படம் முடிந்துவிட்டதல்லவா... இனிமேலும் படத்தில் இருந்து தன்னை தூக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட ஹீரோ ‘சார்... அது வந்து... அப்பா பணம் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு...’ என்று ஒரே போடாக போட்டிருக்கிறார். அதைக் கேட்டதும் அதிர்ந்தே போய்விட்டார் தயாரிப்பாளர்.

‘என்ன தம்பி நான் உங்களைதான் மலை போல நம்பி இருந்தேன்... நீங்க என்னடான்னா... காலை வாரிட்டீங்களே...’ என்று வருத்தத்துடனே சொல்லியிருக்கிறார்.

‘என்ன பண்றது சார்... நான் எங்க அப்பாவை மலை போல நம்பியிருந்தேன்... அவரு என்னை கவுத்துட்டாரே....’ என்று சொல்லியிருக்கிறார் ஹீரோ.

முக்கால்வாசி படப்பிடிப்பு முடிஞ்சு போச்சு... இனி என்ன பண்றது... வேறு வழியில்லாமல் மீதி பணத்தையும் தன் கையிலிருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தி முடித்திருக்கிறார்கள்.

கையில காசே இல்லாம தயாரிப்பாளருக்கு அல்வா கொடுத்து ஹீரோவாகிவிட்டதால் அந்த ஹீரோவைப் பற்றி ‘பையன் ரொம்பவே உஷாருப்பா...’ என்கிறார்கள் இளசுகள் பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

00:27 by iamvenkatesh · 0

hotlinksin

சரவணபவன் சர்வரை காதலிக்கும் நடிகை!




பொதுவாக நடிகைகளிடம் ‘யாரையாவது காதலிக்கிறீர்களா?’ என்று கேட்டால், படத்தில் மட்டும்தான் காதலித்திருக்கிறேன்... என்று பூசி மெழுகுவார்கள். ‘படத்தில நடிக்க வருவதற்கு முன்பு படிக்கும் போது யாரையாவது காதலித்திருக்கிறீர்களா’ என்று கேட்டால், ‘இடத்தை கொஞ்சம் காலி பண்ணுறீங்களா?’ என்பது போல் இருக்கும் அவர்களது பார்வைகள். இவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபடுகிறார் காதல் சரண்யா. காதல் படத்தில் சந்தியாவுக்கு தோழியாக வந்தவர், இப்போது மழைக்காலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 

இவரிடம் காதல் அனுபவம் பற்றி கேட்டால், இவரிடம் இதுவரை இரண்டுபேர் மட்டுமே காதலை சொல்லியிருக்கிறார்களாம். ஒருவர் சரவணபவன் சர்வர். அடிக்கடி சரவணபவனுக்கு போகும் இடத்தில் அவர் சந்தியாவிடம் காதலை ஓப்பன் பண்ணியிருக்கிறார். அதற்கு ஒரு ரிப்ளை கூட பண்ண முடியவில்லையாம் சரண்யாவால். 

படிக்கும்போது தனது சீனியர் ஒருவரை காதலித்திருக்கிறார் சரண்யா. இந்த விஷயம் வீட்டுக்குத் தெரிந்ததும் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதனாலேயே காதல் பாதியில புட்டுக்கிச்சாம். ‘யாரு வேணும்னாலும் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்...’ என்று ஓப்பனாகவே பேசுகிறார் சரண்யா.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு




சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தமிழக அரசின் மின்வெட்டு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்தவுடன் இப்போது இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகமாகும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கீழே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘மின்சாரம் இருப்பதால்தானே நீங்க பேசிக்கொண்டிருக்கிறீங்க...’ என்று கேட்டார்.

இதனால் கடுப்பான விஜயகாந்த், ’யார் நீங்க...?’ என்று கேட்டார், அதைக் கேட்ட அந்த ஆள், ‘எங்க ஊருக்கு வந்து விட்டு என்னையே நீ யார்ன்னு கேட்கிற நீங்க யாரு..?’ என்று கேட்டார். இதனால் கடுப்பான விஜயகாந்த், ‘மேலவா... சொல்றேன்...’ என்று சொல்ல ‘நீ கீழே வா...’ என்று பதிலுக்கு அந்த ஆசாமி சொல்ல, இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க காவலுக்கு நின்றிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். தேமுதிகவினர் இது குறித்து காவல்துறையினரிடம் முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தேமுதிகவினரையும் சமாதானம் செய்ய விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றார்.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்




சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோவாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடித்த படங்களை இப்போது பார்த்தால் அவருக்கே சகிக்கவில்லையாம். இவர் நடித்த பழைய படங்களை டிவியில் போட்டால் அந்த சேனல் பக்கமே ரிமோட்டைக் கொண்டு போக மாட்டாராம் அர்ஜூன். அதையும் மீறி எப்போதாவது அந்த படங்களைப் பார்த்துவிட்டால் அவரது பொண்ணுங்களே அவரை கிண்டல் பண்ணி சிரிக்கிறார்களாம். நடிக்க வந்த புதிதில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் என்ன நடிப்பது எப்படி நடிப்பது என்று தெரிந்து கொள்ளாமலே இயக்குநர்கள் சொல்வதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடும் அர்ஜூன், அதன் பிறகு படிப்படியாக நடிப்பில் தன்னை பட்டை தீட்டியிருக்கிறார்.

01:13 by iamvenkatesh · 0

hotlinksin