அதிர்ச்சியடைய வைத்த தனுஷின் 3
ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி பிரத்தியேக தியேட்டரில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக 3 படம் சத்யம் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்கான டிக்கெட்டை போர் பிரேம்ஸ் தியேட்டரில் நடந்த சூரிய நகரம் பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார்கள். டிக்கெட்டை ஆர்வமாக வாங்கிப் பார்த்த பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், சத்யம் தியேட்டரில் இரவு 10.30 மணிக்கான டிக்கெட் அது. இதுவரை தமிழ் திரையுலகில் பத்திரிகையாளர்களுக்கு எந்த சிறப்புக் காட்சியும் இந்த நேரத்தில் திரையிடப்பட்டதில்லை. இது பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிய சலிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து விசாரித்த போது, பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடியவில்லை என்பதால் தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால், மத்தியானம், மாலை நேர காட்சிக்கான டிக்கெட் எதுவும் கிடைக்காததால் இரவு நேர டிக்கெட்டை மொத்தமாக புக் பண்ணி பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துவிட்டார்கள்... என்பது தெரியவந்தது. ஆனால், அன் டைமில் வைக்கப்பட்ட இந்த பத்திரிகையாளர் காட்சியை பத்திரிகையாளர்களில் பலரும் புறக்கணித்திருக்கிறார்கள்.
01:15 by iamvenkatesh · 0
அடேங்கப்பா... தனுஷின் 3 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?
தனுஷின் படங்களில் இதுவரை வெளியான படங்களை விட 3 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. 3 படத்திற்கு டிக்கெட் ரிசர்வேசன் துவங்கிய அன்றே மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. தனுஷின் படங்களில் முதல் முறையாக இந்த படத்திற்குதான் இப்படி புக்கிங் ஆகி உள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை திங்கட்கிழமைக்குமேல்தான் டிக்கெட் கிடைக்கும்... என்று தியேட்டரில் இருந்து தகவல் வருகிறது. இது பற்றி தியேட்டர்காரர்களிடம் விசாரித்தால், ‘தனுஷ் ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக புக் பண்ணிவிட்டார்கள்... ரஜினி ரசிகர்களும் இந்தப் படத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதால் படம் ரிலீஸ் ஆன இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரம் ஏற்பட்டுள்ளது’ என்று சொல்கிறார்கள். சென்னை, அண்ணா சாலையில் உள்ள திரையரங்கத்திற்கு நாம் சென்ற போது அங்கு தனுஷ் ரசிகர்கள் சிலர் படம் ரிலீஸ் ஆன அன்று டிக்கெட் கிடைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், ‘தனுஷ் படத்தை முதல் நாளில் முதல் காட்சி பார்த்துவிடுவோம். ஆனால் 3 படத்தை அவ்வாறு பார்ப்பதற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதற்கு காரணம், படத்தின் கொலைவெறி பாடல் ஏற்கனவே மிகப்பெரிய ஹிட்டாகியிருப்பதுதான். அதுவே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டதால் தனுஷின் மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் முதல் நாளில் டிக்கெட் கிடைக்கவில்லை...’ என்று தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் ‘தியேட்டர்காரர்களிடம் சிலர் மொத்தமாக டிக்கெட்டை வாங்கிவிடுகிறார்கள். படம் ரிலீஸ் ஆன அன்று பிளாக்கில் விற்று கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்... இதில் தியேட்டர்காரர்களுக்கும் பங்கு இருக்கிறது...’ என்று தியேட்டர்காரர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்.
01:17 by iamvenkatesh · 0
நடிகையை பந்தாடும் இயக்குநர்கள்...
பார்ப்பதற்கு ஸ்மார்ட் அன்ட் க்யூட்டாக இருக்கும் பிந்து மாதவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்தது கழுகு. கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்ததால் அவரது கெப்பாசிட்டிக்கு ஏற்றவாறே இந்த படத்தின் வெற்றியும் அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிந்துமாதவி ஈரம் அறிவழகன் நகுலை வைத்து இயக்கும் வல்லினம் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ படத்திலிருந்து பிந்துமாதவியை தூக்கிவிட்டு மிருதுளா என்னும் புதுமுகத்தை நடிக்க வைத்துவிட்டார் அறிவழகன். இது ஒரு புறம் இருக்க, சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில், ரெட்ஜெயன்ட் தயாரிப்பில் உருவாக இருக்கும் நீர்ப் பறவைகள் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க பிந்து மாதவியைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்திருந்தார் சீனு ராமசாமி. என்ன ஆச்சோ... ஏதாச்சோ... இப்போது திடீரென பிந்து மாதவியை தூக்கிவிட்டு சுனைனாவை விஷ்ணுவுக்கு ஜோடியாக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. இது குறித்து இயக்குநர்கள் தயாரிப்பில் விசாரித்துப் பார்த்தால் கால்ஷீட் பிரச்சினை... என்று இரண்டே வார்த்தையில் சொல்லி முடிக்கிறார்கள்.
00:59 by iamvenkatesh · 0
பிளாக் எழுதுபவர்கள் மேல் கடுப்பில் சினிமா இயக்குநர்கள்
காலைக் காட்சி 12 மணிக்குத் துவங்கினால் அது முடிந்த சில நிமிடங்களிலேயே பிளாக்கில் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தில் படம் பற்றி அலசி காயப்போட்டு விடுகிறார்கள் பிளாக் எழுதுபவர்கள். படம் நன்றாக இருந்தால் விழுந்து விழுந்து பாராட்டும் இவர்கள் படம் நன்றாக இல்லை என்றால் கடுமையாக விமர்சனமும் செய்துவிடுகிறார்கள். இந்த பிளாக்கர்கள் மீது சினிமா இயக்குநர்களுக்கோ தயாரிப்பாளர்களுக்கோ கோபம் இல்லை. ஆனால் சில பிளாக் எழுதுபவர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் குறிப்பாக தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.க்கள்.
பத்திரிகையிலோ அல்லது ஏதாவது மீடியாவிலோ வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்களில் பலரும் சொந்தமாக பிளாக் எழுதி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியை தாம் பணியாற்றும் மீடியாவுக்காக பார்த்துவிடும் இவர்கள், படம் பார்த்துவிட்டு வந்ததும் செய்யும் முதல் வேலை தமது பிளாக்கில் படம் பற்றிய விமர்சனத்தை எழுதுவதுதான். தான் வேலை பார்க்கும் மீடியாவுக்கு மட்டும் ஒன்றிரண்டு நாட்கள் கழித்தே எழுதித் தருகிறார்கள் என்பது வேறு கதை.
தாம் பிளாக்கில் எழுதும் விமர்சனத்தில் படத்தின் பிளஸ்களை எழுதுவதை விட்டு மைனஸ்களையே எழுதித் தள்ளுகிறார்களாம் இவர்கள். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே இவர்கள் எழுதுவதால் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கூட கிடைக்காமல் போய்விடுவதுதான் பரிதாபம். இதனால் இது போன்று பிளாக் எழுதும் பிளாக்கர்கள் மேல் ரொம்பவே கடுப்பாக இருக்கிறார்கள் படத்தின் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும். எனவே பிளாக் எழுதும் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் காட்சிக்கு கூப்பிடாமல் இருந்துவிடலாமே என்னும் கோரிக்கையை பி.ஆர்.ஓ.விடம் வைத்திருக்கிறார்களாம்
01:12 by iamvenkatesh · 0
நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் டிவி சீரியலுக்கு வரும் இளம் நடிகை
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் சோனியா அகர்வால். இந்த படம் ரிலீஸ் ஆனதும் நிச்சயம் அதைத் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும் என்று நினைத்திருந்த சோனியா அகர்வாலுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படம் எடுபடாமல் போனதால் அதைத் தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் ஹீரோயினாக நடிப்பது என்னும் தனது கொள்கையை சற்றே தளர்த்தியிருக்கிறார் சோனியா. பொருத்தமான கேரக்டராக இருந்தால் போதும்... என்று சொல்லியிருக்கிறார் சோனியா அகர்வால். விரைவில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் டிவி சீரியலில் சோனியா தலைகாட்டுவார் என்று தெரிகிறது.
12:00 by iamvenkatesh · 0
‘வெங்காயம்’ ரிசல்ட் - கலக்கத்தில் சேரன்!
ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் வெங்காயம். புதுமுகங்களே முழுக்க முழுக்க படத்தில் இருந்தாலும் படம் அனைவரது பாராட்டையும் பெற்றது. பார்த்தவர்கள் பாராட்டினாலும் படம் ஓடினால்தானே சந்தோஷம். ஆனால் படமோ வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு வெளியேறியது. காரணம் படத்திற்கு சரியான பப்ளிசிட்டி இல்லாததுதான். குறை சொல்ல முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தைப் பார்த்து அதிசயித்துப் போனவர் இயக்குநர் சேரன். இது போன்ற நல்ல படங்கள் ரசிகர்களை சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்று நினைத்த சேரன் இந்த படத்தை கொஞ்சம் விளம்பரப்படுத்தி ரீ ரிலீஸ் செய்தார். சேரனே இதை செய்வதால் இந்த படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, தியேட்டரில் கூட்டமே இல்லையாம். முன்பு வெங்காயம் என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆன போது இருந்ததை விட கூட நாலு பேர் அதிகமாக உட்கார்ந்து இந்த படத்தைப் பார்க்கிறார்களாம். சொந்தப் பணத்தைப் போட்டு சேரன் இந்த படத்தை ரிலீஸ் செய்ததால் செலவு செய்த பணம் சேரனின் கையைக் கடிக்கும் என்றே தெரிகிறது. ஆனாலும் ஒரு நல்ல முயற்சியைச் செய்தார் சேரன் என்பதற்காக நிச்சயம் அவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும். இந்த படத்தை படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ராஜ்குமார் முதலிலேயே இவ்வளவு பப்ளிசிட்டியுடன் களம் இறக்கியிருந்தால் படம் நிச்சயம் வசூலையும் வாரிக் குவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வெங்காயம் ஏற்படுத்திய காயம் பற்றிய விவரம் தெரியாமலே ஆரண்ய காண்டம், முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களையும் ரீ ரிலீஸ் செய்யத் தயாராகி வருகிறார்களாம் படத்தின் தயாரிப்பாளர்கள்.
00:31 by iamvenkatesh · 0
நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்
ஒஸ்தி படத்தில் மல்லிகா போட்ட குத்தாட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த மல்லிகாவையே கடுப்பாக்கியிருக்கிறது கார் தயாரிப்பு நிறுவனம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்ட மல்லிகா அந்த கார் ஷோரூமுக்குப் போயிருக்கிறார். ஆனால் கார் வாங்கும் ஆசை அடியோடு போய்விட்டதாம் அங்கு நடந்த சம்பவத்தால். அப்படி அங்கு என்னதான் நடந்தது? ‘நீங்கள் எங்கள் காரை வாங்க முடிவெடுத்தற்கு நன்றி. ஆனால் உங்களுக்கு எங்களால் ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்பனை செய்ய முடியாது...‘ என்று கைவிரித்துவிட்டதாம் விற்பனை நிறுவனம். ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களின் இமேஜ் மற்றும் பின்புலம் போன்றவற்றை பரிசீலித்தே காரை அவர்களிடம் விற்பனை செய்யுமாம். அப்படி இருக்கும் போது அந்த நிறுவனம் காரை தமக்கு விற்பனை செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது, தன்னை மிகவும் அவமானப்படுத்தும் செயலாக நினைத்து வெறுத்துப் போய்விட்டாராம் மல்லிகா.
00:43 by iamvenkatesh · 0
பாலியல் தொழிலாளியாக நடிக்க ஆசை - நடிகை அதிரடி
நடிகரோ நடிகையோ தன் வாழ்நாளில் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தே ஆக வேண்டும் என்னும் லட்சியத்தை வைத்திருப்பார்கள். அது அவர்களுடைய ட்ரீம் ரோல். நடிகை ஆன்ட்ரியாவுக்கும் இப்படி ஒரு ட்ரீம் ரோல் இருக்கிறது. அது என்ன தெரியுமா? பாலியல் தொழிலாளியாக நடிப்பது. ‘பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடிப்பது தனது கனவு ரோல் என்றும் அந்த கேரக்டரில் நடிக்க யோசிக்கமாட்டேன்... உடனே ஒத்துக் கொள்வேன்...’ என்கிறார் ஆன்ட்ரியா. இது போன்ற கேரக்டரில் நடித்தால் உங்கள் இமேஜ் பாதிக்காதா என்று கேட்டால் ‘கரீனா கபூர், தபு போன்றோரல்லாம் அது போன்ற கேரக்டரில் நடித்தார்கள். அதனால் அவர்களது இமேஜ்க்கு பாதிப்பு வந்துவிட்டதா என்ன?’ என தனக்கு முன்னாலேயே பாலியல் தொழிலாளியாக படங்களில் நடித்த நடிகைகளைச் சுட்டிக்காட்டி பேசுகிறார் ஆன்ட்ரியா.
01:30 by iamvenkatesh · 0
நிகிதாவை விட்டு வைக்காத இயக்குநர்
அறிமுகமாகி பல வருடங்கள் ஆன போதிலும் இதுவரை வெகு சில படங்களிலேயே
நடித்திருக்கிறார் நிகிதா. சமீபத்தில் வெளியான முரண் படத்திலும் சேரனின்
அடங்காத மனைவியாக வந்து ஆட்டம் போட்டவர் இந்த நிகிதா. கார்த்தி நடித்து
வரும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்றாவது நாயகியாக இப்போது
இணைந்திருக்கிறார் நிகிதா. இந்தப் படத்தை இயக்கிவருகிறார் சுராஜ். ஏற்கனவே
அலெக்ஸ் பாண்டியனின்ல அனுஷ்கா, சனுஷா ஆகியோர் நாயகிகளாக நடித்து வரும்
நிலையில் சுராஜ் நிகிதாவுக்கு இந்த வாய்ப்பை கூப்பிட்டுக்
கொடுத்திருக்கிறார். கார்த்தியுடன் நடிப்பது பற்றி கேட்டால், ‘கார்த்தி
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்… கார்த்தியுடன் நடிக்கும் இந்த படம் எனக்கு
பிரேக் கொடுக்கும் என்று நம்புகிறேன்…’ என்கிறார் நிகிதா.
14:24 by iamvenkatesh · 0
Subscribe to:
Posts (Atom)









