கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்
தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட வடிவேலு விரைவில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இரண்டு வேடத்தில் இவர் நடிக்கும் இந்த படம் ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இரண்டாம் புலிகேசி மாதிரியான படமாக இருக்குமாம். ஒருவேளை இரண்டாம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம். சிம்புதேவனின் இரண்டாம் புலிகேசி படம் மிகப்பெரிய அளவு வெற்றி படமாக அமைந்திருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கிடையில் வடிவேலு காமெடியில் மறுபடியும் ஒரு காதல் என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் போலி டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. போலி டாக்டராக இவர் வரும் இடங்களில் எல்லாம் தியேட்டர் அதிரப் போவது உறுதியாம். இந்தப் படத்திற்குப் பிறகு வடிவேலுவின் மார்க்கெட் ஏறுமுகமாக இருக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் வடிவேலு வந்துவிட்டால் இப்போது உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்களின் மார்க்கெட் சிதறிவிடும் என்பதால் அந்த காமெடிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கலக்கல் வடிவேலு - கலக்கத்தில் காமெடி நடிகர்கள்”
Post a Comment