மே தினமும் கடுப்பேத்திய டிவி நிகழ்ச்சிகளும்...



மே தினம் என்பதாலேயே டிவிக்களில் இன்று எக்கச்சக்க நிகழ்ச்சிகள் இருந்தன. எல்லாமே பொழுது போக்கு நிகழ்ச்சிகள்தான். உலகத் தெலைக்காட்சிகளில் முதல் முறையாக என்னும் டைட்டிலோடு இன்று ஒவ்வொரு படங்களையும் டிவியில் போடுவதை பெருமையாக நினைக்கின்றன தொல்லைக்காட்சிகள். இன்று தொலைக்காட்சிகளில் படங்களில் ஒரு மெசேஜ் உடன் கூடிய படமாக காண்பிக்கப் பட்ட படம் நண்பன் மட்டுமே. இந்தியாவின் கல்வி முறைகளை சாடுவதாலேயே இந்தப் படத்திற்கு எத்தனை விருதுகளையும் கொடுக்கலாம்.

கலைஞர் டிவியிலும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமில்லை என்றாலும் உருப்படியாக ஒரு காரியத்தை செய்தது கலைஞர் டிவி. நிகழ்ச்சிகளின் இடை இடையே அவ்வப்போது பல்வேறு கவிஞர்களையும் திரைப்பட பாடலாசிரியர்களையும் மே தினம் பற்றிய கவிதைகளை சொல்லச் சொல்லி அதை ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு கவிதையும் முத்து முத்தாக இருந்தது. உழைப்புக்கு பேர் சொன்ன கவிதைகளாக இருந்தன அவை. இதற்காக கண்டிப்பாக கலைஞர் டிவியை பாராட்டியே ஆக வேண்டும். அதே நேரத்தில் முழுக்க முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளையே விடுமுறை நாட்களில் ஒளிபரப்பி கடுப்பேத்தும் தொலைக்காட்சிகள் கொஞ்சம் தங்கள் பாணியை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும்.







hotlinksin

0 Responses to “மே தினமும் கடுப்பேத்திய டிவி நிகழ்ச்சிகளும்...”

Post a Comment