கடுப்பில் விமல், சிவா - காரணம் ‘கலகலப்பு’
படம் பார்க்க போன ரசிகர்கள் எல்லாருமே சிரிச்சிக்கிட்டேதான் வெளிய வராங்க. நோ லாஜிக்... ஒன்லி காமெடி என்கிற பாலிசியுடன் களம் இறங்கிய கலகலப்பு கலெக்க்ஷனிலும் கொலைகுத்து குத்துதாம். இந்தப் படத்தின் வெற்றியில் சுந்தர் சி ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் கடுப்பில் இருக்கிறார்கள் விமலும் சிவாவும்.
கலகலப்பு படத்தின் இடைவேளைக்குப் பிறகு வருகிறார் சந்தானம். அதுவும் அவரது காமெடி பெரிய அளவுக்கு எடுபடவில்லை என்றாலும் சிவா, மனோபாலா, இளவரசு என மிகப்பெரிய பட்டாளங்கள் இருப்பதாலேயே அவரது காமெடியும் சிரிக்கிற வகையில் இருந்தது. படத்தின் முதல் பாதியைத் தாங்கிப் பிடிப்பவர் சிவாதான். ஆனால் படத்தின் விளம்பரங்களிலோ சந்தானத்தைதான் முதன்மைப்படுத்துகிறார்களாம். போஸ்டர் டிசைன்களிலும் சந்தானத்தை நடுவில் வைத்து விமலையும் சிவாவையும் ஓரம் கட்டிவிடுகிறார்களாம். இதனால் கடுப்பான விமல், படத்தின் மெயின் ஹீரோ என்னையே இருட்டடிப்பு பண்றாங்க... என்னும் எரிச்சலில் இருக்கிறாராம். இவர் இப்படி என்றால் சிவாவோ, ‘படத்தின் முதல் பாதியை ஓட்டுறதே என்னுடைய மொக்கை காமெடிதான். அதற்குதான் ஒவ்வொரு ரசிகரும் க்ளாப்ஸ் விசில் அடிக்கிறாங்க... ஆனா, என் படத்தையும் விளம்பரங்களில் ஓரம்கட்டுறாங்க...’ என்று கடுப்புடனே பொருமுகிறார்.
கலகலப்பு படம் பார்க்கிற ரசிகர்களுக்கு மட்டும்தான் போலிருக்கு...

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “கடுப்பில் விமல், சிவா - காரணம் ‘கலகலப்பு’”
Post a Comment