பத்திரிகையாளர்களைத் ஓட ஓட துரத்தியடிக்கும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்க மாட்டாருன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இந்த சினிமா பிஆர்ஓ உதவியாளருக்கு நல்லாவே பொருந்தும். தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ.க்களில் ஒருவர்தான் ஜாண்மகன். சொத்தை பி.ஆர்.ஓ.க்களே நாலு உதவியாளர்களை வைத்திருக்கும் போது ஐடி கம்பெனி டிப்டாப் ஆசாமி போன்று இருக்கும் இவரோ ஒரே ஒரு குமாரமான உதவியாளரை வைத்திருக்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கோ தலை கம்முன்னு இருக்க வாலோ போடாத ஆட்டம் எல்லாம் போடுது.

பத்திரிகையாளர் சந்திப்பை வைப்பதற்கு முன்பே, சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் பி.ஆர்.ஓ.விடம் நாலு பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டாலே போதும் என்று சொல்லி விடுகிறார்கள். எதற்கு செலவு செய்து அப்படி ஒரு சந்திப்பை நடத்துவானேன் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களோ எதையும் கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே மீடியாக்கள்தான். எனவே எல்லா மீடியாக்களையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்துவிடுவார்கள். இந்த முன்னணி பி.ஆர்.ஓ. பண்ணுவது எல்லாமே பெரிய நிறுவனங்களுக்கான படங்கள் என்பதால் பெரும்பாலான மீடியாக்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருக்கும்.

வருகிற பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பதற்கு வைக்கப்பட்டிருக்கும் அன்பளிப்புகளை ஆட்டையப் போட்டுவிடுகிறாராம் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர். ஏதோ ஆசைப்பட்டு பண்ணுறான்பா... விட்டுரலாம் என்று நினைத்தால் இவர் பத்திரிகையாளர்களை சரிவர மதிப்பதே இல்லை. பத்திரிகையாளர்களை வேண்டும் என்று அவமானப்படுத்துகிறார்... என்று இவர் மீது குற்றம் வாசிக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள்.

பெரிய பத்திரிகையில் வேலை பார்ப்பவர்கள் வந்துவிட்டால் சாஷ்டாங்கமாக வணக்கம் சொல்லும் இந்த பி.ஆர்.ஓ. உதவியாளர், நடுத்தரமான சிறிய பத்திரிகையாளர்கள் வந்தால் கண்டு கொள்வதே இல்லை. அதே போல பெரிய பத்திரிகை ஆட்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கோ, பத்திரிகையாளர் காட்சிக்கோ தொடர்ந்து அழைப்பு கொடுத்து அழைப்பாராம். அதுவே சிறிய பத்திரிகை என்றால் கண்டு கொள்வதே இல்லையாம்.

வழக்கு எண் 18/9 படத்தின் பத்திரிகையாளர் காட்சியிலும் இது போல சில மீடியாக்களிடம் ’படம் இருக்கு வந்தா வாங்க...’ என்று வேண்டா வெறுப்பாக அழைக்க அவர்கள் பத்திரிகையாளர் காட்சிக்கு போகாமல் படத்தைப் பற்றி எழுதாமல் எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். வர வர இவனுக்கு கொழுப்பு அதிகமாகிப் போச்சு... மதிக்கிறதே இல்லை என்று உள்ளூர அழுது புலம்பும் இவர்கள் வாலைப் பற்றி தலையிடம் புகார் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

வாலே இப்படி இருந்தா தலை எப்படி இருக்கும்..? யார் போன் செய்தாலும் எடுக்கவே மாட்டாராம் இந்த தலை. (இந்த மாதிரி ஆளுங்களுக்கு எதுக்குப்பா போனு. பேசாம தலையச் சுத்தி தூர எறியலாம்ல...) அப்படி இருக்கும் போது அவரிடம் எப்படித்தான் புகார் வாசிப்பதாம்...? வெலவெலத்துப் போய்க்கிடக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தயாரிப்பாளர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் இவர்களே வேண்டிய மீடியாக்களை மட்டும் கூப்பிடுகிறார்கள். பி.ஆர்.ஓ. 100 பத்திரிகையாளர்களை கூப்பிட சொன்னால் உதவியாளர் வெறும் 50 பேருக்குத்தான் அழைப்பு விடுக்கிறாராம். மற்றவர்களை கொஞ்சம் கொஞ்சம் ஓரம் கட்டி விடுகிறார்கள் என்று எக்கச்சக்கமாகக் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்.

வால் இப்படியே ஓவரா ஆட்டம் போட்டா எப்படி அதன் கொட்டத்தை அடக்குறதுன்னு தீவிரமாக யோசிச்சுக்கிட்டு இருக்கிறார்களாம் இந்த பத்திரிகையாளர்கள். இது, பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.


பதிவர்களே http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.


hotlinksin

0 Responses to “பத்திரிகையாளர்களைத் ஓட ஓட துரத்தியடிக்கும் சினிமா பி.ஆர்.ஓ. உதவியாளர்”

Post a Comment