விஜய்யின் துப்பாக்கிக்கு வந்த தலைவலி!
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த நேரத்தில் துப்பாக்கி படத்திற்கு தலைவலி தரும் விதத்தில் களம் இறங்கியிருக்கிறது கள்ளத்துப்பாக்கி என்னும் படம். இந்த படம் 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் உதவியாளரான ரவிதேவன் என்பவரால் துவங்கப்பட்டது. நெடு நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் இப்போது இறுதிகட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இரு படங்களின் போஸ்டர்களும் சென்னை நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இரு படக்குழுவினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘துப்பாக்கி படத்தின் போஸ்டர்களை எங்கள் கள்ளத்துப்பாக்கி படத்தின் போஸ்டர் மீது ஒட்டி மறைக்கிறார்கள்...’ என்பதை முதல் பிரச்சினையாக துவங்கியிருக்கும் ரவிதேவன் ‘விஜய்யின் துப்பாக்கி படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும்’ என்று இப்போது போர்க்கொடி தூக்க ஆரம்பித்திருக்கிறார்.
திரிஷாவைத் திருப்திப்படுத்த தமன்னா நீக்கம்
போட்டோ கிராபரை உதைத்த நடிகை!
'நித்தி'கொடுத்த கலக்கல் பிரசாதம்!
ஓவியாவால் காப்பாற்றப்பட்ட சுந்தர்.சி!

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “விஜய்யின் துப்பாக்கிக்கு வந்த தலைவலி!”
Post a Comment