விஜயகாந்தை கடுப்பாக்கிய ஆசாமி - சங்கரன்கோவிலில் பரபரப்பு




சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருகிறார். சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, தமிழக அரசின் மின்வெட்டு குறித்து பேசிக் கொண்டிருந்தார். தேர்தல் முடிந்தவுடன் இப்போது இருக்கும் மின்வெட்டு இன்னும் அதிகமாகும் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கீழே நின்று கொண்டிருந்த ஒருவர், ‘மின்சாரம் இருப்பதால்தானே நீங்க பேசிக்கொண்டிருக்கிறீங்க...’ என்று கேட்டார்.

இதனால் கடுப்பான விஜயகாந்த், ’யார் நீங்க...?’ என்று கேட்டார், அதைக் கேட்ட அந்த ஆள், ‘எங்க ஊருக்கு வந்து விட்டு என்னையே நீ யார்ன்னு கேட்கிற நீங்க யாரு..?’ என்று கேட்டார். இதனால் கடுப்பான விஜயகாந்த், ‘மேலவா... சொல்றேன்...’ என்று சொல்ல ‘நீ கீழே வா...’ என்று பதிலுக்கு அந்த ஆசாமி சொல்ல, இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்க காவலுக்கு நின்றிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். தேமுதிகவினர் இது குறித்து காவல்துறையினரிடம் முற்றுகையிட்டனர். காவல்துறையினர் தேமுதிகவினரையும் சமாதானம் செய்ய விஜயகாந்த் அங்கு பிரச்சாரத்தை முடித்துவிட்டு வேறு பகுதிக்கு சென்றார்.

00:25 by iamvenkatesh · 0

hotlinksin

என் பொண்ணுகளே என்னை கிண்டல் பண்றாங்க... - அதிர்ச்சியில் பிரபல நடிகர்




சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ஹீரோவாக தமிழ் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் நடித்த படங்களை இப்போது பார்த்தால் அவருக்கே சகிக்கவில்லையாம். இவர் நடித்த பழைய படங்களை டிவியில் போட்டால் அந்த சேனல் பக்கமே ரிமோட்டைக் கொண்டு போக மாட்டாராம் அர்ஜூன். அதையும் மீறி எப்போதாவது அந்த படங்களைப் பார்த்துவிட்டால் அவரது பொண்ணுங்களே அவரை கிண்டல் பண்ணி சிரிக்கிறார்களாம். நடிக்க வந்த புதிதில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் என்ன நடிப்பது எப்படி நடிப்பது என்று தெரிந்து கொள்ளாமலே இயக்குநர்கள் சொல்வதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடும் அர்ஜூன், அதன் பிறகு படிப்படியாக நடிப்பில் தன்னை பட்டை தீட்டியிருக்கிறார்.

01:13 by iamvenkatesh · 0

hotlinksin

கேபிள்சங்கருக்கு வலை வீசும் இயக்குநர்கள்




திறமைசாலிகள் வாய்ப்புகளை தேடிப் போகவேண்டியதில்லை. வாய்ப்புகளே அவர்களை துரத்திப் போய் பிடித்துக் கொள்ளும் என்பதற்கு கேபிள் சங்கரை ஒரு உதாரணமாக சொல்லாம். தமிழ் பிளாக்கர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் கேபிள் சங்கர் படம் இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். சமீபத்தில் இவரை துரத்திப் பிடித்த வாய்ப்பு, படத்திற்கு வசனம் எழுதுவது. சுந்தர் சி இயக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் மசலா கேஃப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் கேபிள் சங்கர். இந்த வாய்ப்பு அவருக்கு தானாக போய் சேர்ந்திருக்கிறது. இயக்குனர் பத்ரி அவருடன் சேர்ந்து வசனமெழுத அழைத்ததன் பேரில் சுந்தர்சி படத்திற்கு வசனகர்த்தாவாக மாறிவிட்டார் கேபிள்சங்கர். படத்தின் காட்சிகளில் நிறையோ குறையோ மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடும் கேபிள் சங்கருக்கு முன்னணி இயக்குநர் சிலர் இப்போது வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். ‘என் பட டிஸ்கஸனில் வந்து கலந்துக்குங்க…’ என்பதுதான் அந்த இயக்குநர்களி தற்போதைய கோரிக்கையாம்.

00:38 by iamvenkatesh · 0

hotlinksin

செல்வராகவன் வாழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்




சில வருடங்களுக்கு முன்பு 7ஜி ரெயின்போ காலனி படம் வந்த சமயம் என்று நினைக்கிறேன். அப்போது வார இதழ் ஒன்றில் செல்வராகவன் பேட்டி ஒன்று படித்தேன். அதில் ‘தேவதைகள் முட்டாள்கள்’ என்பதை செல்வராகவன் சொல்வது போல போட்டிருந்தார்கள். தேவதைகளை ஏன் இப்படி திட்டி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே பேட்டியைப் படிக்க ஆரம்பித்தேன்.

செல்வராகவன் +1 படித்துக் கொண்டிருந்த போது, ஒன் சைடாக ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தாராம். அந்த பெண் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பாளாம். அவள் +2 படித்துக் கொண்டிருந்தாளாம். செல்வராகவனை விட கிட்டத்தட்ட 2 வயது பெரியவளாம். தன் காதலை, பல நாட்களாக அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செல்வராகவனால் அவளிடம் சொல்ல முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் அவள் வீட்டினர் செல்வராகவனது வீட்டுக்கும் பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தார்களாம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் செல்வராகவன் மனதில் பத்து லட்சம் பட்டாம் பூச்சுகள் பறக்கும். அவள் வரும் போது அந்த ஏரியாவே தேசிய கீதம் பாடுவது போல இருக்குமாம் செல்வராகவனுக்கு.


ஒரு நாள் அவள் வீட்டுக்கு வந்த போது அவளை அப்படியே கட்டிப் பிடித்துவிட்டாராம் செல்வராகவன். அவளோ கோபப்படாமல் அவரை அப்படியே அணைத்துக் கொண்டாள். ‘நீ எக்ஸாம்ல பெயிலாகிட்டன்னு உங்க அம்மா சொன்னாங்க... எந்த டவுட் இருந்தாலும் என்கிட்ட கேளு... அதுக்காக பீல் பண்ணக் கூடாது... சரியா...’ என்று சொல்லி அவரை தேற்றுவது போல் பேசியிருக்கிறாள். அப்போது வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டதாம் செல்வராகவனுக்கு.

அதன் பிறகு செல்வராகவன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாலும் அவளை மட்டும் மறக்கவே முடியவில்லையாம். ஓரிரு மாதங்களுக்குப் பிறகு அந்த தேவதை பற்றி அவர் கேள்விப்பட்ட விஷயம் அவருக்கு அதிர்ச்சியாவே இருந்திருக்கிறது. அவர் ஒன்சைடாக நேசித்த அந்த தேவதை, யாரோ ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாளாம். அந்த பையனோ சுத்த பொறுக்கியாம். ஒழுங்காக குளிக்காமல் வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பானாம். ‘அவனிடம் அப்படி என்னதான் அவளுக்கு பிடித்திருந்ததோ... இப்படி ஒரு வெட்டிப் பயலுடன் ஓடிப் போய்விட்டாளே... அவள் தேவதைதான்... தேவதைகள் முட்டாள்கள்...‘ என்று சொல்லியிருந்தார். வெட்டிப் பயலுடன் ஓடிப் போனாள் என்றால் அந்த தேவதை நிச்சயம் முட்டாளாகத்தான் இருந்திருப்பாள்.

00:18 by iamvenkatesh · 0

hotlinksin

அனிருத்துக்கு நோ சான்ஸ் – தனுஷ் அதிரடி



ஒய் திஸ் கொலை வெறி பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன? உள்ளூர் பாடலான ஒஸ் திஸ் கொலை வெறிடி உலக அளவுக்கு பேசப்பட்டது. 3 படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படத்தின் விலையையும் எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டார்கள். இது ஒரு புறம் இருக்க இந்தப் பாடலுக்கு இசை அமைத்த அனிருத்க்கு தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை தனுஷ். தொடர்ந்து படிக்க... கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/zZLgjH

17:04 by iamvenkatesh · 0

hotlinksin

சேவற்கொடி - இல்ல... இல்ல... இது கொசுக்கடி...




எதார்த்த சினிமாவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் சேவற்கொடி படத்தின் இயக்குநர். ஆனால் படமோ அதிகப்படியான எதார்த்தத்துடன் வந்துவிட்டது.

பாலா, ஒரு நாள் வள்ளியைப் பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிறான். பார்த்த உடன் பத்திக்கிட்டு வருகிறது காதல். அப்புறம் அவளைத் தேடி தேடி அலைகிறான். ஒரு மாதத்திற்கு பிறகு வள்ளியைக் கண்டுபிடித்து காதலை ஓப்பன் பண்ணுகிறான். அவளும் சரி சொல்ல இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இருவர் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு சம்மதித்து விட காதலர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். இந்த நேரத்தில் வருகிறது பிரச்சினை. எதேச்சையாக ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் நண்பனாகிறான் ஒருவன். அவன் டிரைவர் காளி என்பவனுடைய தங்கையையுடன் ஊரைவிட்டு எஸ்கேப் ஆகிவிட, அவர்களை பாலாதான் அனுப்பிவைத்தான் என்று தவறாக புரிந்து கொண்ட காளி, தொடர்ந்து படிக்க... கீழே உள்ள லிங்கை க்ளிச் செய்யவும் 

01:08 by iamvenkatesh · 0

hotlinksin

கோபத்தில் த்ரிஷா – காரணம் என்ன?



ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து தம்மு என்னும் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் தொடக்கம் முதலே இந்தப் படத்தில் செம ஹாட்டாக த்ரிஷா நடிக்கிறார் என்னும் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வந்தன. இதனால் ஊடகங்கள் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கிறார் த்ரிஷா. ‘நான் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை இல்லை. நல்ல நடிக்கும் திறமை உள்ள நடிகை என்னும் இமேஜ் என் மீது இருக்கிறது. தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

http://bit.ly/xu1WjP

11:20 by iamvenkatesh · 0

hotlinksin

ஓர் இளம் விதவையின் எதிர்பார்ப்பு…



அந்த இளம் விதவைப் பெண்ணிற்கு வயது வெறும் 26 தான். 2 வயதில் ஒரு பெண்குழந்தையும் அவளுக்கு இருக்கிறது. 23 வயதிலேயே அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். திருமணம் ஆன மூன்று வருடங்களில் சந்தோஷமாகப் போய்க் கொண்ருந்த வாழ்க்கையில் பெரிய இடியே வந்து இறங்கியிருக்கிறது. அவள் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து போனான். இது நடந்த 6 மாதத்தில் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/xybVma

00:21 by iamvenkatesh · 0

hotlinksin

கிசுகிசுவை விரும்பும் நடிகை



கொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கையாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவுக்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆகவில்லை. தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

http://bit.ly/AxRBId

23:38 by iamvenkatesh · 0

hotlinksin

ரசிகர்களை ஏமாற்றிய ஒரு நடிகையின் வாக்குமூலம்


சினிமாவில் சம்பாதிக்கவேண்டும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதுதான் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் கதையாக எடுத்துக் கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர். படம் உண்மையிலேயே ஒரு நடிகையின் வாக்குமூலமாக இருந்ததா என்பதைப் பார்ப்போம்.


எஸ்.ஜி. தொலைக்காட்சி தனது டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கும் பொருட்டு வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்கிறது. அந்த தொலைக்காட்சியின் உரிமையாளரின் மகள் (புன்னகைபூ கீதா) பிஸியாக இருந்த நடிகை அஞ்சலி திடீரென காணாமல் போனதும்… அவரைக் கண்டுபிடிப்பிடித்து அவர் பற்றிய வாழ்க்கையை பதிவு செய்யப் போவதாக தெரிவிக்கிறார். இந்த நிகழ்ச்சி டிவியில் வந்தால் அனைவரது பாராட்டையும் பெறும் என்று அனைவரும் இதை வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 

15:15 by iamvenkatesh · 0

hotlinksin