போதையால் சிரழியும் மாணவர்கள்பிஞ்சிலே பழுத்தவர்கள் என்பது குமரி மாவட்டத்தில் உள்ள இறைச்சகுளம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் போதை மருந்துகளை பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. டயருக்கு பஞ்சர் ஒட்டப் பயனபடும் ஒருவகையான மருந்தை பயன்படுத்தியும் அதை எரிப்பதன் மூலம் உருவாகும் புகையிலிருந்தும் போதையை அனுபவிக்கிறார்களாம் இந்த மாணவர்கள். இதை அந்த பகுதிவாசிகள் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

மாணவர்கள் இது போன்று போதை பொருட்களை பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும், தண்ணி அடிப்பதும் இப்போது பரவலாக பரவி வருகிற விஷயமாக மாறிவிட்டது. கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நாளுக்கு நாள் மாணவர்கள் இது போன்ற பழக்கங்களில் ஈடுபடுவது அதிகரித்துதான் வருகிறது. எங்க போய் முடியுமோ இது...?
hotlinksin

0 Responses to “போதையால் சிரழியும் மாணவர்கள்”

Post a Comment