விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்
பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்த விளம்பரமும் இல்ல. தினசரியில் மட்டும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள் அதுவும் விளம்பரத்தில தொப்பை வயிறோட ஒருத்தர் நிக்கிற மாதிரி. அதனாலதான் படத்துக்கு விநாயகான்னு பேரு வெச்சிருப்பாங்க போல. இந்த தொப்பை ஆசாமிதான் ஹீரோவா அட வௌங்குச்சு போங்க என்றுதான் படம் பார்க்க போகும்வரை நினைத்திருந்தேன். ஆனால் படத்திற்கு இளம் கதாநாயகர்களின் படங்களுக்கு வருவது போன்ற கூட்டம் வந்திருதது. ஒருவேளை இவர்கள் சந்தானத்துக்காக வந்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் சந்தானத்துக்காக வந்தவர்கள் சந்தானத்தை திரையில் பார்த்ததும் கைத்தட்டியிருக்க வேண்டுமே... அதுவும் இல்லை. பின்புதான் புரிந்தது வந்திருந்தவர்கள் எல்லோரும் படத்தில் ஏதோ இருக்கிறது என்ன எண்ணத்தில்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணத்தை நன்றாகவே நிறைவேற்றி அனுப்புகிறது விநாயகா.
இனி படத்தின் கதைக்குப் போவோம்.

பல படங்களில் பார்த்துவிட்ட கதைதான் என்றாலும், கார்த்திக் கதாபாத்திரம் அதையெல்லாம் நினைவுக்கு கொண்டுவராமல் செய்துவிடுகிறது. படம் போரடிக்காமல் நகருகிறது. பின்னணி இசை இல்லாமல் திரையில் கேரக்டர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ மேடை நாடகம் ஃபீல் நமக்குத் தோன்றினாலும், அடுத்தடுத்த காட்சிகள் படத்தை இன்னும் டெவலப் செய்து கொண்டு போகின்றன. இடைவேளைக்குப் பிறகு கதாநாயகி பீல் பண்ணுகிற இடங்களில் சில காட்சிகள் ரீபிட்டடு போல் வந்து போகின்றன.

இவருடன் சந்தானம் படுத்திருக்கும் போது மனுஷன் போடுகிற குறட்டைச் சத்தத்துக்கு சந்தானம் நொந்து நூடுல்ஸ் ஆகிறார் என்றால், லிப்டில் சந்தானம் மாட்டிக் கொள்கிற போது அசால்டாக கார்த்திக் வந்து திறந்துவிடுவது குபீர் சிரிப்பு காமெடி. கார்த்திக் கேரக்டரின் சாதாரண பேச்சே பல இடங்களில் நம்மை கைத்தட்டி சிரிக்க ரசிக்க வைக்கின்றன.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் ‘பையா’ சோனியா. பொண்ணு நடிக்குது என்று சொல்ல முடியாது அந்த அளவுக்கு செம கேசுவலாக பண்ணிட்டுப் போறாங்க. எந்த காட்சியிலும் அலட்டிக்கிற மாதிரி இல்லாம ரொம்ப ரிலாக்ஸா பண்றாங்க சோனியா. தமிழ் சினிமாவில் சோனியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்பிருக்கிறது. ஆனா, நம்ம ஆளுங்க இந்த மாதிரி முக வெட்டு பொண்ணுகளை ரசிப்பாங்களாங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான். இவர் தவிரவும் வேறு சில கதாநாயகிகளும் இருக்கிறார்கள். எல்லாம் தமிழ் சினிமாவில் பார்த்த முகங்கள்தான்.
சந்தானம் அவருக்கே உரிய ஸ்டைலில் காமெடியில் கலக்கியிருக்கிறார். மேலும் சின்னச் சின்ன கேரக்டர்களில் அற்புதமாக பலரும் பண்ணியிருக்கிறார்கள். அதுவும் அந்த அண்ணி கேரக்டர், அவங்க வாய்ஸ். நச்ன்னு இருக்கு.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவரும் நல்ல படம் பார்த்த திருப்தியில் சந்தோஷமாகவே வெளியே வருகின்றனர். இது ஒன்றே போதும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு.
படத்தை இயக்கியிருக்கிறார் பாலசேகரன். அடிதடி, வெட்டு குத்து, கிளாமர் காட்சிகள், குத்துப்பாட்டு இதெல்லாம் இல்லாமல் படம் எடுத்ததற்காகவே பாலசேகரனுக்கு ஒரு பொக்கே கொடுக்கலாம். ராம் மோகன் ராவ் படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோ என்றாலும் கதை மீது நம்பிக்கை வைத்து படத்தைத் தயாரித்த அவருக்கும் ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “விநாயகா வெடி சிரிப்புக்கு பஞ்சமில்லாத படம் - விமர்சனம்”
Post a Comment