‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…
கதாநாயகியாக பல படங்களில் நடித்தவர் ‘மல்லிகை’ நடிகை. சமீபகாலமாக இவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. புதிது புதிதாக பல நடிகைகள் அவரது சொந்த ஊரிலிருந்தே களம் இறக்கப்பட மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டுவிட்டார் மல்லிகை. தனக்குத் தெரிந்த இயக்குநர்களிடம் எல்லாம் வாய்ப்பும் கேட்டுப் பார்த்துவிட்டார். ஆனால் போனில் இவரது அழைப்பு வந்துவிட்டாலே தப்பித்தால் போதும் என்று ஓடுகிறார்களாம் இயக்குநர்கள். பொறுத்திருந்து பார்த்தவர், இப்போது ஒத்தைப் பாடலுக்கு குத்தாட்டம் போடுவது என்று முடிவெடுத்துவிட்டாராம். பொருளாதார சிக்கல்களை சமாளிக்க தான் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக தன் காதலரிடம் சொல்ல அவரும் ‘ஓ.கே. தாராளமாக ஆடு…’ என்று சொல்லிவிட்டாராம். விரைவில் கச்சையுடன் களம் இறங்கவிருக்கிறார் மல்லிகை.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “‘மல்லிகை’ நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு…”
Post a Comment