குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!
நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை பற்றி பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் சட்டையை வீசும் விதமாக தன் உள்ளத்தில் தோன்றியதை பகிர்ந்து இருந்தார். அதை உங்கள் பார்வைக்காக அறியத் தருகிறேன். 

Saravanan Poongavanam பூ.கொ.சரவணன்

நாமக்கல் பள்ளிகளை பற்றி இந்த இதழ் குமுதத்தில் வந்துள்ள கட்டுரை மனதை என்னவோ செய்கிறது !அதில் அவர்களின் ஆசிரியர்கள் உடன் தங்கி இருப்பத்தால் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்கிற மாதிரியான தோற்றம் ஏற்ப்பட்டு இருக்கிறது !ஆனால் உண்மை நிலை என்ன தெரியுமா ?இதன் வரலாறு என்ன தெரியுமா ?முதன்முதலில் வெறும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பள்ளியில் தொடங்குகிறது இதற்கான விதை !பதினோராம் வகுப்பை அரக்கபரக்க முடித்து விட்டு பிளஸ் டூ வகுப்பை ஆரம்பித்து அதில் பக்கம் பக்கமாக வரிக்கு வரி தேர்வெழுத வைத்து அதை மீண்டும் நான்கு முதல் ஐந்து திருப்புதல் தேர்வுகள் வைத்து ,நான்கு மணிநேரம் எழுத வேண்டிய வினாத்தாளை மூன்று மணி நேரத்தில் எழுத வைப்பது ,விடுமுறைகள் தராமல் இருப்பது,விளையாட விடாமல் இருப்பது என பல்வேறு வகையான கூறுகளோடு உச்சபட்சமாக அரசு நிர்ணயிக்கும் விலையை விட அதிகமான கட்டண வசூல் செய்தல் இவை அனைத்தையும் செய்து பப்ளிக்குக்கு பிள்ளைகளை அனுப்பி அவர்களை மாநில இடம் பெற்றவர்களாக ஆக்கி விட்டதாக கொக்கரிக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது !ரேசில் அரை நாள் முன்னமே ஓடி ஜெயிக்கிறார்கள் என்பது முதல் வருத்தம் !அடுத்தது இதைப்பற்றி பேச வேண்டிய பல படைப்பாளிகள் பேசுவதில்லை !இப்படிப்பட்ட முறையில் பிள்ளைகளை மிகப்பெரிய மன மட்டும் உடல் ரீதியான மன அழுத்ததிற்கு ஆளாகும் சூழலை ,ஒரு மிகப்பெரும் பொருளாதார சுரண்டலை நடுத்தர வர்க்கத்தின் மீது செலுத்தும் பள்ளிகளின் செயலை கண்டிக்க வேண்டிய பிரபலமான பதிப்பாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் ,எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள்,விமர்சகர்கள் ,படைப்பாளிகள் -பல பேர் இந்த பள்ளிகளின் விழாக்களில் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது விருது பெற்றோ கலந்துகொள்வது வருத்தத்தை தருகிறது !ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி பேசவே எழுதவோ இவர்கள் செய்வது இல்லை !தெரியாது எங்களுக்கு இதெல்லாம் என்றால் நல்ல நகைமுரண் தான் !இதைப்பற்றி தைரியமாக எழுதுங்கள் அய்யா !காரணம் இதோ வருகிற திங்கள் கிழமை ஒவ்வொரு பெற்றோரும் லட்சங்களை கட்டிக்கொண்டு கனவுகளோடு இந்தப்பள்ளிகளின் வாசலில் நிற்க நீங்கள் மறைமுக உதவி செய்து இருகிறீர்கள் !நல்ல வருவீங்க !
hotlinksin

0 Responses to “குமுதத்திற்கு எதிராக வாசகர் வீசிய சாட்டை!”

Post a Comment