பிளாக் எழுதுபவர்கள் மேல் கடுப்பில் சினிமா இயக்குநர்கள்




காலைக் காட்சி 12 மணிக்குத் துவங்கினால் அது முடிந்த சில நிமிடங்களிலேயே பிளாக்கில் அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தில் படம் பற்றி அலசி காயப்போட்டு விடுகிறார்கள் பிளாக் எழுதுபவர்கள். படம் நன்றாக இருந்தால் விழுந்து விழுந்து பாராட்டும் இவர்கள் படம் நன்றாக இல்லை என்றால் கடுமையாக விமர்சனமும் செய்துவிடுகிறார்கள். இந்த பிளாக்கர்கள் மீது சினிமா இயக்குநர்களுக்கோ தயாரிப்பாளர்களுக்கோ கோபம் இல்லை. ஆனால் சில பிளாக் எழுதுபவர்கள் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் குறிப்பாக தமிழ் சினிமா பி.ஆர்.ஓ.க்கள்.

பத்திரிகையிலோ அல்லது ஏதாவது மீடியாவிலோ வேலைபார்க்கும் ரிப்போர்ட்டர்களில் பலரும் சொந்தமாக பிளாக் எழுதி வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியை தாம் பணியாற்றும் மீடியாவுக்காக பார்த்துவிடும் இவர்கள், படம் பார்த்துவிட்டு வந்ததும் செய்யும் முதல் வேலை தமது பிளாக்கில் படம் பற்றிய விமர்சனத்தை எழுதுவதுதான். தான் வேலை பார்க்கும் மீடியாவுக்கு மட்டும் ஒன்றிரண்டு நாட்கள் கழித்தே எழுதித் தருகிறார்கள் என்பது வேறு கதை. 

தாம் பிளாக்கில் எழுதும் விமர்சனத்தில் படத்தின் பிளஸ்களை எழுதுவதை விட்டு மைனஸ்களையே எழுதித் தள்ளுகிறார்களாம் இவர்கள். அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே இவர்கள் எழுதுவதால் படத்திற்கு கிடைக்கும் ஓப்பனிங் கூட கிடைக்காமல் போய்விடுவதுதான் பரிதாபம். இதனால் இது போன்று பிளாக் எழுதும் பிளாக்கர்கள் மேல் ரொம்பவே கடுப்பாக இருக்கிறார்கள் படத்தின் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும். எனவே பிளாக் எழுதும் பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் காட்சிக்கு கூப்பிடாமல் இருந்துவிடலாமே என்னும் கோரிக்கையை பி.ஆர்.ஓ.விடம் வைத்திருக்கிறார்களாம் 



hotlinksin

0 Responses to “பிளாக் எழுதுபவர்கள் மேல் கடுப்பில் சினிமா இயக்குநர்கள்”

Post a Comment