சிம்புவின் சம்பளம் குறைப்பு - அதிர்ச்சியில் சிம்பு
படங்களில் விரலை ஆட்டி ஆட்டி பஞ்ச் டயலாக்களை அள்ளி வீசுவார் சிம்பு. இவரது தோல்விப் படங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றில் எல்லாம் இப்படிப்பட்ட பிஞ்சு போன டயலாக்களைப் பேசி பேசியே மனுஷன் ரசிகர்களை சாகடிச்சிருப்பாரு. இப்போ லேட்டஸ்டா இவர் நடித்து தரணி இயக்கத்தில் வெளியான ஒஸ்தி குஸ்தியில் பின்வாங்கிவிட சிம்பு கொஞ்சம் நொந்துதான் போய்விட்டார். ஒரு படம் வெற்றி பெற்ற உடனேயே சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள் நம்ம ஹீரோக்கள். ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துவிடுவார்கள் தயாரிப்பாளர்கள். இந்த டீல்தானே காலம் காலமாக நடந்து வருகிறது. சிம்பு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? சிம்புவின் அடுத்த படத்தில் கொஞ்சம் கட் போட்டிருக்கிறது படத்தின் தயாரிப்புத் தரப்பு. ஒஸ்தி தோல்விக்கு கூட இவ்வளவு ஃபீல் பண்ணியிருக்க மாட்டார் சிம்பு. சம்பளக் குறைப்புக்கு அதைவிட அதிகமாக பீல் பண்ணுகிறாராம்.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சிம்புவின் சம்பளம் குறைப்பு - அதிர்ச்சியில் சிம்பு”
Post a Comment