கடலை போட பிகரு வேணுமா...? ஆசை காட்டி மோசம் பண்ணும்... - ஒரு உஷார் ரிப்போர்ட்




கடந்த வாரத்தில் ஒருநாள் அவசரமாக வெளியே போக தயாராகிக் கொண்டிருந்தேன். திடீரென மொபைலுக்கு வந்தது ஒரு மெசேஜ். உங்கள் சந்தோஷமோ சோகமோ எதுவானாலும் பரவாயில்லை உங்கள் தோழி என்னிடம் ஷேர் பண்ணிக்குங்க... என்று போடப்பட்டிருந்தது அந்த மெசேஜில். அதை அனுப்பிருந்தது வோடபோன். இது என்னடா புதுசா இருக்கே... என ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அப்போதைக்கு நேரம் இல்லை அதைப் பற்றி யோசிக்க. அவசரமாக கிளம்பி நண்பரைப் பார்க்க போன இடத்தில் கொஞ்சம் வெயிட் பண்ணு இதோ வந்திடுறேன்... என்று சொல்லிவிட்டார் நண்பர். வேற வழி... அவருக்காக காத்திருந்த போது அந்த வோடவோன் மெசேஜ் நினைவுக்கு வந்தது. மொபைலை எடுத்து பார்த்தேன். ஒரு நிமிடம் தோழியிடம் பேச ரூ. 10 என்று போடப்பட்டிருந்தது. நாம என்னத்தைப் பேச, என்று மனம் சொன்னாலும் அப்படி என்னதான் பேசறாங்க பார்க்கலாம்... எழுதுறதுக்கு ஏதாவது ஒரு விஷயம் தேறுமே என்கிற எண்ணத்தில், நம்பரை அழுத்தினேன்.

எதிரில் போன் எடுத்தார்கள். கேட்டது ஒரு பெண்ணின் குரல்தான். ஆனால் ஆட்டோமேட்டிக்காக பதிவு செய்யப்பட்ட குரல். கால் எடுத்ததும் ஏதோ பெண் பேசுவார் என்று நினைத்த எனக்கு ஆட்டோ மேடிக் ரிப்ளை வந்தது தூக்கி வாரிப் போட்டது. உங்கள் அன்புத் தோழியிடம் பேச வேண்டுமா...? உங்கள் மனதில் என்னவெல்லாம் பேச வேண்டும் என்று தோன்றுகிறதோ அனைத்தையும் பேசுங்கள்... கொஞ்சநேரம் காத்திருங்கள்... என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. 5 நிமிடங்கள் ஆகியிருந்தன. சரி 50 ரூபாய் இந்நேரம் உருவிருப்பானுக... ஆனாலும் இதன் க்ளேமேக்ஸ் என்ன என்று பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து வெயிட் பண்ணிக் கொண்டே இருந்தேன். 10 நிமிடங்களும் கழிந்து விட்ட நிலையில் அதே ஆட்டோமேட்டிக் ரிப்ளைதான் வந்து கொண்டே இருந்தது.

எவ்வளவு நேரம்தான் பேசாமலேயே போனை காதில் வைத்துக் கொண்டிருப்பது... அதற்கு மேலும்  பொறுமை இல்லாமால் அழைப்பை துண்டித்தேன். 100 ரூபாய் துண்டாக போயிருந்தது. இதன் பின்னணி என்ன என்று தெரிந்து கொள்ளும் எண்ணத்தில் போன் செய்த நமக்கே ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் இழப்பு என்றால் ஒரு வேளை கடலை போட பிகரு கிடைக்குமோ என்ற எண்ணத்தில் எத்தனை பேர் போன் செய்திருப்பார்கள். இப்படி ஏன் இந்த நிறுவனங்கள் ஆசை காட்டி மோசம் செய்வது போல் பண்ணுகின்றன. ஆண்களின் பலவீனத்தை புரிந்து கொண்டு மொபைல் நிறுவனங்கள் நடத்தும் இந்த கூத்து விரைவில் முடிவுக்கு வந்தால் சரி. இல்லையென்றால் என்னைப் போல எத்தனையோ பேர் தினம் தினம் பணத்தை இழந்து கொண்டுதான் இருப்பார்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.

01:50 by iamvenkatesh · 7

hotlinksin

ஊர்வசி... லதா... லலிதா... லாவண்யா - ஊலலலா விமர்சனம்


உனக்கு 20 எனக்கு 18, கேடி போன்ற படங்களை ஜோதி கிருஷ்ணா இயக்கிய போது அடடே... ஷங்கருக்கு அடுத்த பிரமாண்ட இயக்குநர் இடத்தை இவர்தான் பிடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. த்ரிஷா, இலியானா போன்றவர்களை தமிழில் அறிமுகப்படுத்தியவர். இப்போது ஊலலலா படத்தின் மூலம் ஹீரோ கம் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார்.



சின்ன வயதில் இருந்தே கேர்ள் ப்ரெண்டுக்காக அலையும் சூர்யா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது ப்ரீத்தி கேர்ள் ப்ரண்டாக கிடைக்கிறார். ப்ரீத்தியை பகடைக்காயாக பயன்படுத்தி வேறு பல பெண்களுடன் பழக ஆரம்பிக்கிறார் சூர்யா. ஆனால் சூர்யாவை உண்மையிலேயே காதலிக்க ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி. ப்ரீத்தியின் காதலை புரிந்து கொள்ளாத சூர்யா கடைசியில் அவள் காதலை புரிந்து கொண்டு வந்த போது அவளோ ஊரைவிட்டு புறப்படுகிறாள். வில்லனும் சூர்யாவை கொல்ல துரத்துகிறான். இந்நிலையில் வில்லனை வெற்றி கொண்டு ப்ரீத்தியுடன் சூர்யா இணைந்தானா இல்லையா என்பது க்ளைமேக்ஸ்.

சூர்யாவாக நடித்திருக்கிறார் ஜோதி கிருஷ்ணா. ப்ளே பாய் ரேஞ்சுக்கு அலையும் இவர் கடைசியில் தன் காதலியின் அன்பைத் தேடி வருகிற இடத்தில் உச்.. கொட்ட வைக்கிறார். படம் துவக்கம் முதல் ஆரம்பிக்கிற கலகலப்பு படம் முழுக்க தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஜோதிகிருஷ்ணாவுக்கு தம்பியாக நடித்திருக்கும் பையன் அடிக்கிற லூட்டியில் தியேட்டரே அதிர்கிறது. ஜோதி கிருஷ்ணாவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய் ரொம்பவே கண்டிப்பான அப்பாவாக வருகிறார். இவரது கண்டிப்பை ஜோதிகிருஷ்ணாவும் அவர் தம்பியும் அடிக்கடி டேமேஜ் செய்வது வெடி சிரிப்பு. கஞ்சாகருப்பு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இவரது உதவியாளராக வரும் பக்கோடா பாண்டி அடிக்கடி காதலையும் காதலிப்பவர்களையும் பற்றி அடிக்கிற கமென்ட்டுக்கு ரசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு.

ப்ரீத்தியாக நடித்திருக்கும் திவ்யா பண்டாரி ஸ்லீவ்லெஸ் டிரஸ் போட்டுக் கொண்டு அலையும் போது நமது பல்ஸ் ரேட்டையும் எகிற வைக்கிறார். நடிப்பிலும் நன்றாகவே தேறுகிறார் திவ்யா பண்டாரி. இலியானாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தாலும் பிடிப்பார். குடும்பத்தின் மீது பாசத்தைக் கொட்டும் அம்மாவாக நடித்திருக்கிறார் ராணி.

சேகர் சந்திரா இசையில் இரண்டு பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன.

ஊலலலா - கலகலப்பு

tamil.hotlinksin.com திரட்டியில் இணைந்துவிட்டீர்களா நண்பர்களே...

tamil.hotlinksin.com திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றி. திரட்டியில் உங்கள் கணக்கை உருவாக்க அல்லது பதிவுகளை இணைக்கும் போது ஏதாவது பிரச்சினை எழுந்தால் தயவு செய்து hotlinksin@gmail.com மெயில் ஐடிக்கு தெரியப்படுத்துங்கள்.

tamil.hotlinksin.com திரட்டியில் ஒவ்வொரு வாரமும் வாசகர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு பரிசு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே நண்பர்கள் தொடர்ந்து பதிவுகளை இணைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தங்கள் நண்பர்களையும் tamil.hotlinksin.com திரட்டியில் பதிவு செய்து பதிவுகளை பகிரச் சொல்லுங்கள்.

01:18 by iamvenkatesh · 0

hotlinksin

தாயையும் மகளையும் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும்...



மத்தியானம் டிவி சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சிறுவர் சிறுமியர்களை வைத்து சிங்கர் போட்டியை நடத்தி வரும் சேனலை கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்தது. அதில் பாடுபவர்களை யாரும் சிறுவர் சிறுமிகள் என்று சொல்ல முடியாது. உருவத்தைப் பார்த்து ஆளை எடை போட வேண்டுமானால் அவர்களை பெரியவர்கள் என்றே சொல்லலாம். அப்படி இருக்கிறது அவர்களின் வளர்ச்சி.


3 படத்தின் டீமினர் சிறப்புவிருந்தினராக இந்த நிகழ்ச்சி வந்திருந்தனர். அப்படி என்னதால் இந்த பசங்க பாடுறாங்க என்று பார்க்கலாம் என்று நினைத்தால் இன்று நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

அதாவது போட்டியாளரையும் அவரது குடும்பத்தில் ஒருவரையும் பாடவும் ஆடவும் வைத்தார்கள். அப்போதுதான் கொடுமையிலும் கொடுமை நடந்தேறியது. 

போட்டியாளரான ஒரு டீன் ஏஜ் பெண்ணும் அவரது அம்மாவும் வந்து பாட, ஆட வந்தனர். ஒரு பாடலுக்கு செமயாக ஆட்டமும் போட்டனர். டைட்டான டாப்சும் ஜீன்சும் போட்டுக் கொண்டு ஆடிய அந்த பெண்ணின் அம்மா அந்த பெண்ணுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்பது போல் ஆட்டம் போட்டார். ஆட்டம் என்றால் ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். ஆட்டத்தை விட ஆடியவர்களின் இளமை பார்த்தவர்களை நிச்சயம் உசுப்பேத்தியிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த கண்கொள்ளா காட்சியை பார்த்து ரசித்த சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த தனுஷ், அனிருத், சிவகார்த்திகேயன் போன்றோரும் இருவரது ஆட்டத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்தனர்.

இவர்களில் தனுஷ் ஒருபடி மேலே போய், ஆடிய அந்த அம்மாவை பார்த்து, ‘நீங்க பார்ப்பதற்கு அம்மா மாதிரியே இல்ல... அவங்க அக்கா மாதிரி இருக்கீங்க... உங்களைப் பார்க்க வயசே தெரியலை...’ என்றார். தாயையும் மகளையும் ஆடவிட்டு வீட்டுக்கு வீடு கொண்டுவந்து காட்டும் அந்த கேடுகெட்ட நிகழ்ச்சியை பார்த்து நொந்து போன நான், சேனலை மாற்றி ‘இசையருவி’ சேனலுக்கு தாவினேன்.

http://tamil.hotlinksin.com/ திரட்டிக்கு நண்பர்கள் தந்து வரும் பேராதரவுக்கு மிக்க நன்றிகள். நண்பர்களே http://tamil.hotlinksin.com/ திரட்டியில் இணைந்து விட்டீர்களா... இன்னும் இல்லையென்றால் உடனே இணைந்து பதிவுகளை இணைத்திடுங்கள். http://tamil.hotlinksin.com/ திரட்டி விரைவில் பதிவர்களுக்கு என பரிசுப் போட்டிகளை அறிவிக்க உள்ளது.

00:03 by iamvenkatesh · 2

hotlinksin

ஓகேஓகே படத்துக்கு தகுதி இல்லையா? - உதயநிதி குமுறல்




தமிழக அரசு தங்கள் படத்திற்கு வரிவிலக்கு அளிக்காமல் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறது என்று வேதனையில் குமுறுகிறார் உதயநிதி. ஏழாம் அறிவு படத்தை உதயநிதி தயாரித்து வெளியிட்ட போது தமிழக அரசின் வரி விலக்குக்கு விண்ணப்பித்திருந்திருக்கிறார்கள். ஆனால் வரி விலக்கு அளிக்காமல் நாட்களை நகர்த்திய தமிழக அரசு, படம் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு வரி விலக்கு கொடுத்திருக்கிறார்கள். அதே நிலையில்தான் இப்போது இருக்கிறது ஓகேஓகே படமும். இந்தப் படத்தை வரி விலக்குக்கு விண்ணப்பித்து நாட்கள் பல ஆன பிறகும் வரிவிலக்குக்கு ஓ.கே. சொல்லும் நிர்வாகத்தினர் படம் பார்ப்பதை தட்டிக் கழித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். கடைசியில் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு உயர்நீதி மன்றத்தின் உத்தரவுபடி படம் பார்க்க நாள் குறிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த 7 பேர் கொண்ட குழு படம் வரி விலக்குக்கு தகுதியானதல்ல என்று முடிவு செய்து அரசாணையை வெளியிட்டுள்ளார்கள்.

சமீபத்தில் வெளியான 3 படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வரும் பாடல் உள்ளது. அது மட்டுமின்றி பாரில் வைத்து திருமணம் முடிவது போன்றும் காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வரி விலக்கு கொடுத்துள்ள அரசு மக்கள் கொண்டாடும் ஓகேஓகே படத்திற்கு வரி விலக்கு கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் உதயநிதி. ‘என் தந்ததை அரசியலில் இருக்கும் காரணத்தினால் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலேதான் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வரி விலக்கு அளிக்காமல் தமிழக அரசு இருந்து வருகிறது. இதனால் தயாரிப்பாளராககிய எனக்கு மட்டுமின்றி... விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது...’ என்று குமுறியிருக்கிறார் உதயநிதி.

20:23 by iamvenkatesh · 0

hotlinksin

என் மனதைக் குத்திக் கிழித்த படம் ‘பச்சை என்கிற காத்து’



தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் படமோ அதன் காட்சிகளே உங்கள் மனதை விட்டு அகல மறுத்தால் அந்த படத்தில் ஏதோ ஒரு விஷயம் வெயிட்டாக இருந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஒரு படமாகத்தான் இருக்கிறது பச்சை என்கிற காத்து. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் படத்தின் தாக்கம் நம் மனதை விட்டு அகல நாட்கள் சில பிடிக்கும் போலிருக்கிறது.



பள்ளிக்கூடம் போகிற டீன் ஏஜ் வயதில் அரசியல் ஆசையில் அரசியலுக்குள் நுழைகிற ஒரு இளைஞன் பின்நாளில் அந்த அரசியல் காரணமாகவே அவன் வாழ்க்கை எப்படி சின்னாபின்னமாகிறது என்பதை சொல்கிறது பச்சை என்கிற காத்து.

சாவு வீட்டில் ஒரு நீள ஒப்பாரியுடன் படம் ஆரம்பிக்கும் போது, பார்க்கிற நமக்கு என்னடா இது இப்படி ஆரம்பிக்கிறாங்களே... என்று தோன்றுகிறது. அடுத்த சில நிமிடங்களில் கதாநாயகன் அறிமுகமாக, அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு சுவாரஸ்யம். இடைவேளை வரைக்கும் பரபரவென நகரும் திரைக்கதையுடன் பறக்கிறது படம். கதாநாயகன் பச்சை அடிக்கிற ஒவ்வொரு கமென்ட்டும் கலக்கல். வசனம் அவ்வளவு ஷார்ப். கட்சியில் சேர்ந்ததுமே வேஷ்டி கட்டிக் கொண்டு பச்சை அடிக்கிற அலப்பறையில் தியேட்டரே சிரிப்பில் அதிர்க்கிறது. இந்த அதிர்வு இடைவேளை வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காதலியை பார்க்க பெண்கள் பள்ளிக்கூடத்தின் உள்ளே காவலாளியையும் மீறி சாதாரணமாக நுழையும் பச்சையிடம் ஆசிரியைகள் ஓடி வந்து பதறியபடி கேட்கும் போது பச்சை சமாளிக்கிற விதம் இருக்கிறதே. அடடா... இது போன்று பச்சை வரும் ஒவ்வொரு காட்சிகளும் எழுந்து நின்று கைத்தட்டத் தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பிறகு முழுமையான கதைக்குள் பயணப்படுகிறது படம். எந்த பிரச்சினையையும் சர்வசாதாரணமாக எதிர்கொள்ளும் பச்சையை நமக்கு ரொம்பவே பிடித்துப் போய்விடுகிறது. அவன் செய்யும் சில வேலைகள் ஒரு மாதிரியாகவே இருந்தாலும் நம்மை ரொம்பவே ரசிக்க வைத்துவிடுகிறான் பச்சை.

பச்சையாக நடித்திருக்கிறார் ‘வாசகர்’ என்னும் அறிமுக நடிகர். உதவி இயக்குநராக இருந்தவரை பச்சை என்கிற காத்து படத்தின் இயக்குநர் கீரா நடிக்க அழைத்து வந்துவிட்டார். பச்சை கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். அவ்வளவு அழகாக பண்ணியிருக்கிறார் நடிகர் வாசகர். இவர் நடிப்பைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

இவருக்கு ஜோடியாக செல்வி என்னும் கேரக்டரில் மலையாள நடிகை ‘தேவதை’. பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக இருக்கிறார் இந்த தேவதை. செல்வி கேரக்டரிலும் அவர் தங்கை கேரக்டரிலும் நடித்திருக்கிறார். அதுவும் க்ளைமேக்ஸ் காட்சிகளில் இவர் முகத்தில் இருக்கும் குரூரம்... நம்மை பயப்படவும் வைக்கிறது.

காதாநாயகனின் அப்பா, அம்மா, பாட்டி, கதாநாயகியின் பாட்டி, அப்பா, ஹீரோவின் நண்பன், பெரியவர் என எல்லோரும் நடிப்பில் அக்மார்க் முத்திரை பதிக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசை ஹரிபாபு. பின்னணி இசையில் மட்டுமல்லாமல் பாடல்களிலும் கலக்கியிருக்கிறார்கள். முதல் பாடலாக வரும் ‘மீசையில்லா சூரப்புலி’ பாடல் நம்மை சீட்டோடு கட்டிப் போட்டுவிடுகிறது. பாடலுக்கான குரல் இன்னும் அருமை. காட்சிகளையும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். ‘உன்னை நான் பார்த்தேன்...’ தீயே... பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன.

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் படத்திற்கு வலு சேர்க்கின்றன. இடைவேளைக்குப் பின்பு வரும் சில காட்சிகளில் எடிட்டர் கொஞ்சம் கை வைத்திருக்கலாம்.

பச்சை என்கிற காத்து படத்தை இயக்கியிருப்பவர் தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார். அதனால்தான் படம் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் படத்தை அவ்வளவு தூரம் ரசிக்கிறார்கள் என்பது புரிகிறது. திரைக்கதை, காட்சி வடிவமைப்பில் சிறப்புக் கவனம் செலுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு கதையை புதுமுகங்களை வைத்து நடிக்க வைக்க அதுவும் தான் எதிர்பார்த்த நடிப்பை திரையில் கொண்டு வர அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அது இருந்ததால்தான் கீராவால் இப்படி ஒரு காவியத்தை திரையில் எழுத முடிந்திருக்கிறது. பச்சை என்கிற காத்து படத்தின் மூலம் தான் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப் பட வேண்டிய இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார் கீரா.

00:46 by iamvenkatesh · 0

hotlinksin

ஓ.கே. ஓ.கே. - விமர்சனம் - வேணாம் மச்சான் வேணாம்...




காதலனுக்கு கல்தா கொடுத்துவிட்டு வேறு ஒருவனை மணக்கத் தயாரான மீரா தன் காதலன் சரவணனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். அதுவும், தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்திர வேணாம்… என்னும் பின்குறிப்போடு. அழைப்பிதழைப் பார்த்ததும் கடுப்பான மீராவின் காதலன் சரவணன் திருமண மண்டபடத்தில் புகுந்து மீராவை கடத்திக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் நண்பன் பார்த்தசாரதியை அழைத்துக் கொண்டு திருமணம் நடக்கும் புதுச்சேரிக்கு பயணிக்கிறான். சரவணனுக்கும் மீராவுக்கும் காதல் வந்தது எப்படி… காதல் ஏன் மோதலில் முடிந்தது… அவள் வேறு ஒருவனை மணக்க முடிவெடுத்தது ஏன்? கடைசியில் சரவணன் மீராவுடன் இணைந்தானா என்பதை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

தியேட்டருக்கு படம் பார்க்க போகும் ரசிகனை குற்றுயிரும் குலைஉயிருமாய் திருப்பி அனுப்புகிற படங்களே தொடர்ந்து சமீபகாலமாக வந்து கொண்டிருக்க படம் முழுக்க சிரிக்க வைக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல். சந்தானம் அறிமுகமாவதில் இருந்து தொடரும் காமெடி படம் க்ளைமேக்ஸ் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு மணிநேரம் 50 நிமிடங்கள் படம் என்றாலும் படம் பரபரப்பாக நகர்வதால் இடைவேளை வருவதும் தெரியவில்லை. படம் முடியும் போது அட… அதுக்குள்ள படம் முடிஞ்சு போச்சா… என்று எண்ண வைக்கிறது.

ஹீரோவாக அறிமுக நாயகன் உதயநிதி. எந்த ஒரு பில்டப்புமே இல்லாமல் திரையில் அறிமுகமாகி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை ஈர்த்து விடுகிறார். இயல்பாக உதயநிதி நடித்திருப்பது இன்னும் அவருக்கு ப்ளஸாக இருக்கிறது. கீப் இட் அப்… உதயநிதிக்கு எளிதாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணத்தில் ஒவ்வொரு நடன அசைவுகளும் என்றாலும் அதிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

ஹன்ஸிகா இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் பண்ணுகிறார் என்றே சொல்லலாம். முகத்தில் கண்களில் காட்டும் எக்ஸ்பிரஷனே ஹன்சிகாவை இன்னும் தமிழ்சினிமாவில் தூரத்திற்கு அழைத்துச் செல்லும்.

சென்டிமென்ட் அம்மாவாக வந்து திரையில் கண்ணைக் கசக்கும் சரண்யா முதன் முதலாக கலகலக்கவும் வைக்கிறார்.

உதயநிதிக்கு அப்பாவாக நடித்திருக்கும் அழகம்பெருமாள் மனைவியை காணாமல் தவிக்கிற தவிப்பு இருக்கிறதே… அந்த இடத்தில் உச் கொட்ட வைக்கிறார்.

ஹன்ஸிகாவின் அப்பாவாக வரும் ஷயாஜி ஷிண்டே காதலுக்கு உதவுகிற கேரக்டரோ என்று நினைத்தால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சராசரி அப்பாவாகவே வந்து போகிறார்.

ராஜேஷின் பிராண்டட் நடிகரான ஆர்யா, ஆன்ட்ரியா, சினேகாவும் வந்து தலைகாட்டிவிட்டுப் போகிறார்கள்.

படத்தில் உதயநிதியை விட அதிகமாக சந்தானமே வருவார் போலும் அந்த அளவுக்கு சந்தானத்திற்கு காட்சிகள். இதனாலேயே காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே நகர்கிறது. போர் அடிக்கக்கூடிய காட்சிகள், நெளிய வைக்கிற காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ஹரிஸ்ஜெயராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிற ரகம். வேணாம் மச்சான் வேணாம் இளைஞர்களின் தேசியகீதமாக இருக்கும். அழகே அழகே சூப்பர் மெலடி. அகிலா அகிலா பாடலும் கலக்கல் ரகம்.

ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். பாடல்களில் கலக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அளவெடுத்து எடிட் பண்ணியது போல் இருக்கிறது எடிட்டிங் வொர்க்.

இயக்குநர் ராஜேஷின் முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களை விட இந்த படத்தில் திரைக்கதை, அழுத்தமான காட்சிகள், காமெடி அனைத்திலுமே பலமடங்கு அதிகமாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

00:07 by iamvenkatesh · 0

hotlinksin

பதிவர்கள் செய்யும் தவறுகள்


தமிழ்மணம், இன்ட்லி, தமிழ்வெளி எனும் மூன்று திரட்டிகளும் எப்போதும் என் பயர்பாக்ஸில் திறந்தே இருக்கும். அவ்வப்போது இந்த திரட்டிகளுக்கு சென்று உலவி பிளாக்குகளில் மேய்வது வழக்கம். தினமும் இப்படி குறைந்தது 20லிருந்து 50க்கு மேலான பிளாக்குகளை படித்துவிடுவேன். இதனாலேயே ஒருவரது பிளாக்குக்கு தொடர்ந்து  போய் படிக்கும் பழக்கம் இல்லாமல் போயிற்று. 

இப்படி ஒருநாள் தேடி தேடி படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிளாக்குக்குப் போனேன் போன அடுத்த வினாடியே ஏண்டா  இந்த பிளாக்குக்கு வந்தோம் என வெறுத்தேப் போய்விட்டது... என்னைப் போல் அந்த பிளாக்குக்குப் போன பலரும் இப்படி நொந்து போயிருப்பார்கள். அப்படி அந்த பிளாக்கில் நான் பட்ட அவஸ்தைதான் பிளாக்கில் எனக்கிருக்கும் சில யோசனைகளையும் சேர்த்து இந்த தலைப்பில் எழுத வைத்தது.

இதை முதலில் ஒரு கட்டுரையாகத்தான் எழுத யோசித்தேன். ஆனால் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் சேர்ந்து கொண்டே போனதால் இதை ஒரு தொடராக எழுத ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் என்னுள் தோன்றியது. அதன் விளைவுதான் இந்த தொடர்.

எப்படியோ தேடிப் பிடித்து பிளாக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்து விடுகிறோம். அதன் பிறகு என்ன எழுதலாம்... எப்படி எழுதலாம்... என்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்து போய்விடுகிறது. சரி... அதையும் மீறி நல்ல விஷயம் ஒன்றை எழுதிவிட்டால் அதைத் தொடர்ந்து வாசகர்கள் வர வேண்டுமே... அதுவும் பிரபல பதிவராக வேண்டும் என்னும் ஆசை மனதில் வந்துவிடுகிறது. பிளாக்கர்கள் என்ன எல்லாம் செய்தால் பிரபலமாவர்கள்... என்பதை மட்டுமல்ல... என்னவெல்லாம் செய்யாமல் இருந்தாலே பிரபலமாவார்கள் என்பதையும் சொல்லப் போகிறேன்...

அடடே ஒரு இன்ட்ரடக்க்ஷன் கொடுக்கிற ஆர்வத்தில என்ன அந்த பிளாக் ஏன் டென்ஷனாக்கியது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டேனா... கொஞ்சம் பொறுங்கள்... அதுவும் ஒரு நீண்ட பதிவுதான்... அதனால் நாளை சொல்லிவிடுகிறேன்.

-------------------------
தெரியுமா சேதி...

இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி வரிசையில் புதிதாக ஒரு திரட்டி ஒன்று இணைந்திருக்கிறது. ஹாட்லிங்க்ஸ்இன் என்பதுதான் அந்த திரட்டியின் பெயர். நண்பர்கள் ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து உங்கள் பதிவுகளை இணைக்கலாமே. ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைப்பதன் மூலம் உங்கள் பிளாக்கிற்கு ஏராளமான வாசகர்கள் வருவார்கள் என்பது மட்டுமில்லை... உங்கள் இணையதளத்தின் அலெக்ஸா ரேங்கிலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

01:29 by iamvenkatesh · 0

hotlinksin

ஐந்து பேருக்கு மனைவியாக நடிக்கும் நயன்தாரா



நயன்தாரா பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரீ ராமராஜ்யம் என்ற படத்தில் நடித்தார். சீதையாக இந்த படத்தில் நயன் நடிப்பதற்கு படத்தின் பூஜையில் இருந்தே எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எனினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தில் நடித்து முடித்தார். தெலுங்கில் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது இந்த படம். அத்தோடு விருதுகளையும் நயன்தாராவுக்கு பெற்றுத் தந்தது. இந்த படம் வரும் 20 ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா உருவாக்கி வரும் நர்த்தன சாலா என்னும் தெலுங்கு படத்தில் நயன்தாராவை நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். பஞ்ச பாண்டவர்களின் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நயன்தாராவுக்கு பாஞ்சாலி வேடமாம்.

15:52 by iamvenkatesh · 0

hotlinksin

சுயஉதவிக்குழு என்னும் வட்டிக்கடை


நம் நாட்டின் சாமானிய இந்தியனுக்கும் உதவிட விரும்பாத தேசிய வங்கிகள் சிக்கன நிர்வாக நடவடிக்கை என்ற பேரில் 40% மக்களுக்கு வங்கிச் சேவையைத் தர மறுத்தன. இதன் விளைவாக ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி கிராம அளவில் பெருகியிருக்கும் வறுமையை விரட்டப் போகிறோம் என்று கூறி கிராமப்புறங்களில் நிதியுதவிகளை அளித்து தொழில் செய்ய உதவின. கூடுதலாக நிதி தேவைப்பட்டபோது அவை வங்கிகளை அணுகின.



வங்கிகள் தங்கள் விதிமுறைப்படி முன்னுரிமைக் கடன் வழங்கும் திட்டங்களின் அடிப்படையில் தொண்டு நிறுவனங்களுக்கு உதவின. வங்கி வழங்கிய நிதி எந்த பிசிறுமில்லாமல் முறையாக வங்கிகளுக்குத் திரும்பின. தனியார் பெரிய நிறுவனங்கள் பெறும் கடன்கள் முறையாகத் திரும்பாமல் வாரக் கடன் பட்டியலில் சேர்ந்து வங்கிகளை சங்கடத்தில் ஆழ்த்திய நிலையில் தொண்டு நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் நடந்த சிறு கடன் பரிவர்த்தனை சிக்கலில்லாமல் நடந்ததால் பல தேசிய வங்கிகளும் முதலீடு செய்ய முன்வந்தன.

பின்னர் அதே தொண்டு நிறுவனங்கள் வங்கிகளிடம் குறைந்த வட்டியில் பணம் பெற்று வட்டியை கூடுதலாக்கி ஏழைகளுக்கு உதவின. தொண்டு நிறுவனங்களின் கூடுதல் வட்டி, முறையான பரிவர்த்தனையால் கணிசமான லாபம் தொண்டு நிறுவனங்களுக்குக் கிடைத்தன.

சுரண்டல் பூதங்கள் எப்போதும் திடீரென்று பாய்ந்து பிடுங்க மாட்டார்கள். சுற்றி நடக்கும் நிகழ்வை கூர்ந்து பார்ப்பார்கள். எதில் உழைப்பு இல்லாமல் சுளையாக லாபம் பார்க்க முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டு சமயம் வரும்போது கொக்கு கொழுத்த மீனுக்கு காத்திருப்பது போல் காத்திருந்து அள்ளிக் கொள்வார்கள்.

தொண்டு நிறுவனப் போர்வையில் பல தனியாரும் மக்கள் சேவைக்கு வருவதாகத் தங்களை பதிவு செய்தனர். சேரிகள், ஏழைகள் வசிக்கும் காலனிகள், வங்கிச் சேவை வாசனையே இல்லாத விவசாய கிராமங்கள் என தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். அரசிடமிருந்து குறைந்த வட்டியில் நிதியைப் பெற்று அதிக வட்டிக்கு ஏழைகள் மீது கடன்களைத் திணித்தனர். தேடித்தேடி கடன் தந்தனர். இனிக்க, இனிக்கப் பேசினர். மக்களும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சுலபமாக நிதி கிடைத்ததால் திரண்டு நின்று கடன் வாங்கினர். பெண்களை குழுக்களாகத் திரளச் சொன்னார்கள். இதற்கு சுய உதவிக் குழுவென்றும் பெயரிட்டனர். இந்தியாவில் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள் எதுவானாலும் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்திட வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி எதனையும் கண்டு கொள்ளவில்லை. வங்கிகளும் தங்களிடம் குறைந்த வட்டிக்கு பணம் பெற்று அதிக வட்டிக்கு தரும் நிறுவனங்களை கண்டிக்கவில்லை.

ஏழைகள் உழைப்பு முழுவதும் வட்டி கட்டவே பயன்பட்டது. வாங்கிய அசல் தீர்ந்த பின்னும் வட்டி கட்ட வேண்டிய கொடுமை ஏழைகளுக்கு ஏற்பட்டது. கடன் கட்ட இயலாதவர்களின் வீட்டுக்கதவுகள் நடு இரவில் தட்டப்பட்டன. ஆடு, மாடு, கலப்பை எந்திரம் பறிமுதலானது. மானத்துக்கு அஞ்சிய சாமானியர்கள் சாவைத் தவிர வேறு வழியில்லை என கொத்துக் கொத்தாக மடிந்தனர். இதை எழுதும் ஐந்து தினங்களுக்கு முன்பு கூட ஆந்திராவில் ஏழைகளான கணவன் மனைவி தங்களின் ஏழு வயது, ஐந்து வயதுள்ள இரு பெண் குழந்தைகளை அநாதையாக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாட்டில் 24 மாநிலங்களில் கந்துவட்டியை விட மோசமான சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தமிழகம் உட்பட இயங்கிச் சுரண்டுகின்றன. இவற்றால் 22,700 கோடி ரூபாய் இத்தொழிலில் புரள்கிறது. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கோடிகள் வட்டியாகச் சுரண்டப்படுகின்றன.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் 10,000 பணம் தந்தால் அதை 52 தவணைகளில் கூட்டு வட்டியோடு இரக்கமில்லாமல் கறக்கின்றனர். அசல் குறைய குறைய வட்டி குறைய வேண்டும். ஆனால் இங்கே அசல் குறையும். ஆனால் வட்டி மட்டும் நிலையாகப் பெறப்படும்.

10,000-திற்கு 3,500 ரூபாய் முதல் 5,000 வரை தமிழகத்திலேயே வட்டியை சுரண்டுகின்றனர். இதுபோன்ற மோசடி சுரண்டல் திட்டங்களில் பெண்களை சேர்த்து மயக்கிட அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி வேலை செய்கின்றனர்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் சுரண்டல் ஆந்திராவில் அதிகரித்ததின் காரணமாக அங்கு ஏராளமான தற்கொலைகள் நிகழ்ந்ததால் இந்த நிதி நிறுவனங்களின் சுரண்டல் வெளி உலகிற்குத் தெரிந்தது. உடனடியாக அங்குள்ள அரசு புரிந்து கொண்டு சுதாரித்து கடந்த 15.10.2010 அன்று மைக்ரோ பைனான்ஸ் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் அனுமதி பெறாமல் நடக்கும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை வெளியிட்டது.

வட்டி விகிதம், வசூலிக்கும் வழிகள், செயல்பாடு, கடன் வழங்கிய விவரங்கள் பலவற்றையும் அனுப்பி உடனடியாக அரசு ஒப்புதல் பெற வேண்டும் எனப் பல நிபந்தனைகள் அந்த அரசாணையில் இருந்தன. சுரண்டல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அதிர்ந்து போயின. ஏனென்றால் சென்ற நிதியாண்டு கால அளவில் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் இந்திய ஏழைகளின் உழைப்பை வட்டியாக உறிஞ்சிட எஸ்.கே.எஸ். நிறுவனத்தின் சகோதர நிறுவனமான சான்ட்ஸ்டேன் கேப்பிடல், எஸ்.வி.பி. இந்தியா கேப்பிடல் அண்ட் கிஸ்மத் கேப்பிடல் முதலிய நிறுவனங்களில் மட்டும் 75 மில்லியன் டாலரை போட்டுள்ளன. இதைப் போலவே உஜ்ஜிவன் பைனான்ஸ் சர்வீசில் 18.47 மில்லியன் டாலரையும், ஈக்கிடஸ் மைக்ரோ பைனான்சில் 11.44 மில்லியன் டாலரும் தமிழகத்தில் திருச்சியிலிருந்து இயங்கும் கிராம விடியல்!? நிறுவனத்திற்கு மைக்ரோ வெஸ்ட் எனும் அயல்நாட்டு நிறுவனம் 4.25 மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது. ஹேண்ட் இன் ஹேண்ட், பெல்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் முதலிய சென்னை நிறுவனங்களுக்கு இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் 17.5 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

ஆசை ஆசையாக இதுபோல வட்டி சுருட்ட நினைக்கும் நினைப்புக்கு ஆந்திராவின் அரசாணை தடை விதித்துள்ளதால் தற்போது இவைகள் தமிழகத்திற்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் எட்டாயிரம் டாஸ்மாக் கடைகள் ஆண்களின் ஊதியத்தை உறிஞ்சி விடுவதால் அப்பாவி குடும்பப் பெண்கள் வீட்டைப் பராமரிக்க இதுபோன்ற சுய உதவிக் குழுக்களில் சேர்கின்றனர். ஆனால் பாவம்! தங்கள் வீட்டு ஆண்களை டாஸ்மாக் போலவே சுரண்டும் மைக்ரோ பைனான்ஸ் வலைக்குள் இவர்களும் சிக்குகின்றனர்.

இதுபோல் கூடுதல் வட்டி, கூட்டு வட்டி, மிரட்டல் வட்டி, பொருள் அபகரிப்பு, அவமானம், தற்கொலை, அரசாணை, ஆய்வுக்குழு என நடக்க என்ன காரணம்?
கடைக்கோடி இந்தியனையும் கைதூக்கிவிட வேண்டும் என்ற உணர்வு மரத்துப் போன தேசிய வங்கி நிர்வாகங்கள், அவற்றின் சோம்பல் பிடித்த நிர்வாகிகள், இவர்களுடன் வரும் கேட்டை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்காமல் தூக்கத்தில் உள்ள ரிசர்வ் வங்கி நிர்வாகம், நாட்டின் நிதிச் செயலகம், மாநிலமெங்கும் உள்ள நிதிச் செயலகங்கள், சமூக நலத்துறைகள் பலவும் உண்மையான கடமை உணர்வுடன் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுவதால்தான் இந்த நிகழ்வுகள் மக்களை கொடூரமான கந்துவட்டி வலைக்குள் சிக்க வைக்கின்றன. சமூக நோக்கு இல்லாமல் வெறும் வட்டி மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள பிணந்தின்னிகளுக்கு இந்திய சோம்பல் நிர்வாகங்கள் ஊக்க மருந்தாக உள்ளன. மக்களாக தங்கள் சகிப்புத் தன்மையை உதறினால்தான் விடிவு பிறக்கும்.

15:04 by iamvenkatesh · 0

hotlinksin

ஆசைப்பட்ட ஆற்காடு நவாப் அடித்து விரட்டிய வெள்ளைக்காரன்!




தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழிலகத்தில் சமீபத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலாற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப்பரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்மனை கட்டப்பட்டதில் நடந்த ஊழல். அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒடிசா முதல் தமிழகம் வரை தென்பகுதியை 17ம் நூற்றாண்டின் போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் முகமது அலிகான் வாலாஜா நவாப். இவர் பிரம்மாண்டமான அழகிய அரண்மைனை ஒன்றை கட்ட விரும்பினார். அப்போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பெரும் பகுதியை கட்டியவர் பால் பென்பீல்ட். அந்த காலத்தில் இவர் கட்டும் கட்டிடம், மிகவும் தரமானதாக  கருதப்பட்டு வந்ததே இதற்கு காரணம்,. அரண்மனையை கட்ட செலவாகும் தொகையை கட்டி முடித்த பிறகு வாலாஜா நவாப் கொடுத்தால் போதும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரண்மனை கட்டிடப் பணிகள் 1760 ல் தொடங்கப்பட்டு 1768 ல் முடிக்கப்பட்டது.

சுமார் 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் அரண்மனைக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில், சென்னை பல்கலைக்கழகம், செனட் பில்டிங், சென்னை மாநிலக் கல்லூரி, எழிலகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் திருவல்லிகேணி காவல் நிலையம் ஆகியவை அடங்கும். அரண்மனையின் அன்றைய சமையல் கூடமாக இருந்ததுதான், இன்றைய திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்.

அரண்மனையை கட்டி முடிக்க செலவான தொகையைக் காட்டிலும் பல மடங்கு அதிக தொகையை வாலாஜா நவாப்பிடம் பால் பென்பீல்ட் தெரிவித்தார் அதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போன வாலாஜா நவாப். இவ்வளவு தொகையை தன்னால் கட்ட இயலாது என்று அவரிடம் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்கள் தீட்டிய திட்டத்தின்படி, வாலாஜா நவாபிடம் இருந்த நிலப்பரப்பை அபகரிக்க, இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமக பயன்படுத்தி, அரண்மனைக்கு செலவான தொகைக்கு ஈடாக, வாலாஜா நவாபின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், பால் பென்பீல்ட் ஊழல் செய்து விட்டதாக அவர் மீது ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டு, 225 மில்லியன் டாலர் தொகைக்கு கட்டப்பட்ட அரண்மனை கட்டிடங்களை 400 மில்லியன் டாலர் என்று கூறியதாக பால் பென்பீல்ட் மீது குற்றச்சாட்டை வைத்து ஒரு நாடகத்தை ஆங்கிலேயர்கள் அரங்கேற்றினர். இதன் பிறகு வாலாஜா நவாப் உயிர் வாழும் வரை அந்த அரண்மனையை பயன்படுத்திக் கொள்ள மட்டுமே ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர்களின் வாரிசுகள் வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்டதுதான் அமீர் மஹால்.

அரண்மனை கட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரால் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஊழலின் தொடக்கம் தான் இந்தியாவில் ஆங்கிலேயரின் சாம்ராஜ்ஜியம் காலூன்ற காரணமாகி விட்டது. இதற்கு துணைபோன ஊழல் பேர்வழி பால் பென்பீல்ட், தனது இறுதிக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில் தெருத்தெருவாக பிச்சை எடுத்து வாழ்ந்து செத்துப் போனார் என்பது வரலாறு.

அதைப் போலவே சொகுசாக வாழ ஆசைப்பட்ட ஆற்காடு நவாபுகளும் அங்கிருந்து துரத்தப்பட்டதுதான் பரிதாபம்…

00:54 by iamvenkatesh · 0

hotlinksin